twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கருணாநிதி ஆசி, ஸ்டாலின் பரிசு, அந்த நாளை மறக்க முடியுமா?: குஷ்பு உருக்கம்

    By Siva
    |

    Recommended Video

    கருணாநிதிக்காக குஷ்பூ உருக்கம்-வீடியோ

    சென்னை: திமுகவில் சேர்ந்த அந்த நாளை தன்னால் மறக்க முடியாது என்று நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு தெரிவித்துள்ளார்.

    திமுக தலைவர் கருணாநிதியின் மறைவால் தான் அனாதையானது போன்று உணர்வதாக நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

    கருணாநிதியின் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். கருணாநிதி பற்றி அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

    கருணாநிதி

    திமுகவில் சேர்ந்த அந்த நாளை என்னால் மறக்க முடியாது. அவரின் அன்பும், மரியாதையையும் மறக்கவே முடியாது. கையெழுத்திட பேனா கொடுத்து, என் சார்பில் ரூ. 500 செலுத்தி ஸ்டாலின் அந்த நாளை மேலும் சிறப்பானதாக்கினார்.

    குஷ்பு

    குஷ்பு தனது ட்விட்டர் டிஸ்பிளே பிக்சராக கருணாநிதியின் புகைப்படத்தை வைத்திருப்பதை பார்த்து கேள்வி எழுப்பிய காங்கிரஸ் நிர்வாகியிடம், மரியாதைன்னா என்னன்னு உங்களுக்கு தெரியுமா அண்ணா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    வெற்றி

    கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை பார்த்து குஷ்பு மகிழ்ச்சி அடைந்துள்ளார். இறந்த பிறகும் போராடி வென்ற உண்மையான தலைவர் என்கிறார் குஷ்பு.

    ஸ்டாலின்

    கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை அறிந்த திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் மக்களை நோக்கி கையெடுத்து கும்பிட்டு அழுதுவிட்டார். அது பற்றி தான் குஷ்பு ட்வீட்டியுள்ளார்.

    English summary
    Actress cum congress spokesperson Khushbu tweeted that, 'My most memorable day with my guru #Dr.Kalaignar the day I joined #DMK. Can never forget the warmth,love n respect showered by the Great man.. mkstalin made it more memorable by giving me his pen to sign it and paid ₹500 on my behalf. #MemoriesForever'
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X