’இசைஞானி’ பட்டம் கொடுத்தது யாருன்னு தெரியும்!.. ஆனால், அந்த வீடியோவை பார்த்து இருக்கீங்களா?
சென்னை: இசைத்துறையில் மிகப்பெரிய சாதனையை படைத்த இளையராஜாவுக்கு 'இசைஞானி' என்ற பட்டத்தை கொடுத்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். கலைஞர் கருணாநிதி இளையராஜாவுக்கு 'இசைஞானி' பட்டத்தை சூட்டும் அரிதான வீடியோ தற்போது தீயாக பரவி வருகிறது.
அன்னக்கிளி படத்துக்கு இசையமைக்க ஆரம்பித்த இளையராஜா பல ஆயிரம் பாடல்களை இந்தியாவின் பல்வேறு மொழிகளில் இசையமைத்தும் பாடியும் இருக்கிறார். இசை தேவன் என்றும் இசைஞானி என்றும் மேஸ்ட்ரோ என்றும் தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி உலக இசை ரசிகர்கள் கொண்டாடும் இசை கடவுளாக வாழ்ந்து வருகிறார் இளையராஜா.

அவரது 81வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இளையராஜாவுக்கு கருணாநிதி மீது அளவுகடந்த மரியாதை உள்ளது அதேபோல இளையராஜா மீது கருணாநிதிக்கும் அளவற்ற பாசம் இருந்தது குறிப்பிடத்தக்கது.
பிறந்த நாளையே மாற்றிவிட்டார்: இளையராஜாவின் பிறந்தநாள் ஜூன் இரண்டாம் தேதியான இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அவரது உண்மையான பிறந்தநாள் ஜூன் மூன்றாம் தேதி தான் என்பதும் பலருக்கும் தெரிந்திருக்கும். அதற்கான காரணமாகவும் கருணாநிதிதான் உள்ளார். கலைஞரின் பிறந்தநாள் ஜூன் மூன்றாம் தேதி கொண்டாடப்படும் நிலையில், அதே நாளில் நாம் எப்படி பிறந்தநாளை கொண்டாடுவது என்கிற எண்ணத்தில் தனது பிறந்தநள் கொண்டாட்டத்தையே மாற்றிக் கொண்டார் இளையராஜா.
'இசைஞானி' பட்டம்: ஞான தேசிகன் இசையமைப்பாளர் ஆனதும் இளையராஜாவாக ஆனார். அவருக்கு இசைஞானி பட்டத்தை கருணாநிதி வழங்கினார். காரைக்காலில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் மு. கருணாநிதி இளையராஜாவுக்கு 'இசைஞானி' என்னும் பட்டத்தை வழங்கும் வீடியோ தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது. இசையில் இளையராஜாவுக்கு உள்ள ஞானம் போல இந்தியாவில் வேறு எந்த இசையமைப்பாளருக்கும் அளவற்ற பேரறிவு இருக்குமா என்பது சந்தேகம் தான். இசைஞானி என்கிற பட்டத்துக்கு பொருத்தமானவர் இளையராஜா என்பதை அறிந்து கொண்ட கருணாநிதி அந்தப் பட்டத்தை வழங்கினார்.
பா. ரஞ்சித் வாழ்த்து: இளையராஜா பயோபிக் தனுஷ் நடிப்பில் உருவாகி வருகிறது. அந்த படத்தை அருண் மாதேஸ்வரம் இயக்கி வருகிறார். இளையராஜாவுக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இயக்குநர் பா. ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில், " இன்னும் என்னை வெகு தூரம் கூட்டி செல்' ஐயா" இசையின் பெரு வெடிப்பு இசைஞானிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!!" என சூப்பரான போஸ்ட் ஒன்றை போட்டுள்ளார்.



Click it and Unblock the Notifications











