Don't Miss!
- News லோக்சபா 2ம் கட்ட தேர்தல்: 13 மாநிலம் 89 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு.. முக்கிய வேட்பாளர்கள் லிஸ்ட்
- Lifestyle இந்த ராசிக்காரர்கள் திருப்பதிக்கு அடிக்கடி போகக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
கருணாநிதி மரணம்: டெல்லி நிகழ்ச்சியை ரத்து செய்து சென்னை விரையும் கமல்
Recommended Video
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி காலமானதை அடுத்து டெல்லி நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு இன்று இரவே சென்னை திரும்புகிறார் கமல் ஹாஸன்.
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 28ம் தேதி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரின் உடல் நிலை மிகவும் மோசமாக இருப்பதாக இன்று அறிவிக்கப்பட்ட நிலையில் மாலை 6. 10 மணிக்கு அவர் காலமானார். கருணாநிதியின் மறைவையொட்டி இன்று மாலை முதல் நாளை வரை தியேட்டர்களில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் சினிமா நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தாருக்கு நெருக்கமான கமல் ஹாஸன் டெல்லியில் உள்ளார். தகவல் அறிந்த அவர் அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துவிட்டு இன்று இரவே சென்னை திரும்புகிறார்.
கருணாநிதியின் இழப்பு சினிமா துறைக்கு பேரிழப்பு என்று திரையுலக பிரபலங்கள் தெரிவித்துள்ளனர்.