கருணாநிதி நீடுழி பல நூறு ஆண்டுகள் வாழ வேண்டும்.. பவன் கல்யாண்

கருணாநிதி விரைவில் குணமடைய வேண்டும் என நடிகர் பவன் கல்யாண் அறிக்கை விடுத்துள்ளார்.

சென்னை: "ஒரு ஒப்பற்ற தலைவர் நம்முடன் நீடுழி பல நூறு ஆண்டுகள் வாழ ஆசைப்படுகிறேன்" என்று திமுக தலைவர் கருணாநிதி குறித்து பிரபல நடிகரும், ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.

உருக்கமான அறிக்கை ஒன்றில் இதனை பதிவு செய்துள்ள பவன்கல்யாண், கருணாநிதிக்கு பல்வேறு புகழாரங்களையும் அதில் சூட்டியுள்ளார்.

கருணாநிதி மருத்துவமனையில் அனுமதித்ததிலிருந்தே நாட்டின் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பிரமுகர்கள், திரை பிரபலங்கள், என நாள்தோறும் சென்னை வந்து அவரது உடல்நலம் குறித்து கேட்டறிந்து செல்கிறார்கள். அதேபோல எண்ணற்ற தொண்டர்களும் மருத்துவமனை முன்கூடி தங்கள் தலைவர் மீண்டும் நலம் பெற்று வரவேண்டும் என்று வாழ்த்து முழக்கங்கள் எழுப்பி வருகின்றனர். இதைதவிர பிரபலங்கள் பலர் ட்விட்டரிலும், அறிக்கை மூலமாகவும் கருணாநிதி நலம் பெற வேண்டும் என வாழ்த்து அறிக்கையும் வெளியிட்டு வருகின்றனர்.

அதன்படி, பிரபல தெலுங்கு நடிகரும், ஜனசேனா கட்சித் தலைவரும், சிரஞ்சீவியின் தம்பியுமான பவன் கல்யாண் உருக்கமாக ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

ஒப்பற்ற தலைவர்

ஒப்பற்ற தலைவர்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவரும், திராவிடர்களின் வீரப்போர் தவப்புதல்வரும் ஆன பெருமரியாதைக்குறிய கலைஞர் கருணாநிதி அவர்களின் உடல்நிலை கூடிய விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டுகிறேன். அவர் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சில தினங்களாக சிகிச்சை பெற்று வருவதை இந்த நாடே மிகுந்த வேதனையின் உச்சத்தில் எதிர்கொண்டு வருந்துகிறது. கருணாநிதி மக்களுக்காகத் தமிழுக்காக உண்மையான சேவை செய்த ஒரு ஒப்பற்ற தலைவர்.

அளப்பரிய சேவை

அளப்பரிய சேவை

பெரும்பாலும் அவர் நலிந்த மற்றும் பின்தங்கிய வகுப்பினருக்குப் பெரிதும் உதவினார். முதல் அமைச்சராக மற்றும் பல பதவிகளில் பல விதமான நலத்திட்டங்களைத் தமிழக மக்களுக்கு அள்ளித் தந்தவர். ஒரு எழுத்தாளராகத் தமிழ் மற்றும் கலை இலக்கியங்களுக்குச் செய்த அளப்பரிய சேவையால் அவர் கலைஞர் என்று அழைக்கப்பட்டவர்.

மூத்த அரசியல் ஆசான்

மூத்த அரசியல் ஆசான்

இதனை ஒரு மனதாக நான் பிறர் கேட்டுக் கூறவில்லை. நான் சென்னையில் வசித்த போது கண் கூடாக நேரில் பார்த்து இருக்கிறேன். ஒரு உயர்ந்த மூத்த அரசியல் ஆசானாய், ஒரு எழுத்தாளனாய் நானும் இந்த நாடும் அவருக்கு மிகுந்த கடமைப்பட்டுள்ளோம். இப்படி ஒரு தமிழ் இன வீரப்போர் தலைவன் நம்மை சுற்று நூறாண்டுகள் நலமுடன் இருந்தால் மட்டுமே அவரது அரசியல் மற்றும் இலக்கிய அனுபவங்கள் எட்டு திக்கும் ஒவ்வொருவருக்கும் நல்ல வழிகாட்டியாக இருக்க முடியும்.

நீடூடி வாழ வேண்டும்

நான் மனதார இப்படிப்பட்ட ஒரு ஒப்பற்ற தலைவர் நம்முடன் நீடுடி பல நூறு ஆண்டுகள் வாழ ஆசைப்படுகிறேன். எனது ஜனசேனா உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் சார்பாக நான் இருதயபூர்வமாக எனது இருகரம் கூப்பி எல்லாம் வல்ல இறைவனை கலைஞர் அவர்கள் கூடிய விரைவில் நலம் பெற வேண்டுகிறேன்."

இவ்வாறு தனது அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார் பவன் கல்யாண்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X