விஜய்க்கு ஒரு மண்ணும் தெரியாது.. அப்செட்டில் கடுப்பான கருணாஸ்... வாட் ப்ரோ!

சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், கோடிகளில் அதிக சம்பளம் பெறும் ஹீரோவாகவும் விஜய் உயர்ந்துள்ளார். அண்மையில் இவர் நடிப்பில் வெளியான கோட் திரைப்படம் ரூ.400 கோடிக்கு மேல் வசூலை ஈட்டியது. பின்னர், தவெக கட்சியை தொடங்கி முழுநேர அரசியல்வாதியாகவும் 2026ல் நடக்கும் சட்டமன்ற தேர்தலில் களம் காண உள்ளார். அதற்காக தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், நடிகர் கருணாஸ் விஜய்யை பாதரசம் என கடுமையாக திட்டி பேசியது விஜய் ரசிகர்களை கோபத்திற்கு ஆளாக்கியுள்ளது.

தவெக: நடிகர் விஜய் கடந்தாண்டு கட்சியின் முதல் மாநாட்டை விழுப்புரத்தில் ஆரம்பித்தார். அனல் தெறிக்கும் வகையில் இருந்த அவரது பேச்சுக்களை கண்டு அவர் ரசிகர்கள் திகைத்து நின்றனர். அதேபோன்று நடிகை ராதிகாவும், விஜய்யை சின்ன வயதில் இருந்தே தெரியும். பொதுவெளியில் யாரிடமும் அதிக நேரம் பேசவே மாட்டார். மேடையில் அவர் ஆக்ரோஷமாக பேசியது ஆச்சரியத்தை அளித்தது. கட்சி தொடங்கியதற்கு என் மனதார வாழ்த்துகள் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

karunas Vijay political angry speech

சரத்குமார் கோபம்: விஜயின் அரசியல் வருகைக்கு திரையுலகில் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நடிகர்கள் சிலரும் அவரது கட்சியில் உறுப்பினராக இணைந்துள்ளனர். குறிப்பாக தாடி பாலாஜி அவரது புகைப்படத்தை டாட்டூவாக வரைந்திருந்தார். அரசியல் என்று வந்து விட்டால் சொந்தம், அண்ணன், தம்பி, சொந்த புள்ளை என்று கூட பார்க்கமாட்டார்கள் என்பது இப்போது விஜய் விசயத்தில் தெரியவந்துள்ளது. வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று கூறிய சரத்குமாரே இப்போது கடுமையாக திட்டி பேசியிருப்பதை பார்த்து விஜய் ரசிகர்கள் பொங்க ஆரம்பித்துவிட்டனர்.

பாதரசம்: விஜய்யின் அரசியல் வருகையை ஆரம்பத்தில் இருந்தே கருணாஸ் எதிர்த்து வருகிறார். இயக்குநரின் மகனாக இருந்துகொண்டு நடிகர் ஆவது ஈசியாக இருந்திருக்கலாம். வெற்றி பெறுவது கடினம், விஜய் தனது கடின உழைப்பால் இந்த உயரத்தை அடைந்துள்ளார் என அவரே சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்தார். தற்போது அதே கருணாஸ் விஜயை பார்த்து பாசிசத்திற்கும் பாயாசத்திற்கும் வித்தியாசம் தெரியாத பாதரசம் என தாக்கி பேசியுள்ளார். பாதரசம் யாருடனும் ஒட்டாது. அது மக்களுடனும் ஒட்டாது என குறிப்பிட்டுள்ளார்.

karunas Vijay political angry speech

கோபம்: சரத்குமார், கருணாஸ் ஆகியோர் பேசிய வீடியோக்களை ஷேர் செய்து விஜய் ரசிகர்கள் டிரோல் செய்து வருகின்றனர். மேலும், இவர்கள் பேசியிருப்பதை பார்த்து கோபமடைந்த ரசிகர்கள் சரமாரியாக தாக்கி பேச தொடங்கியுள்ளனர். விஜயின் வளர்ச்சி பிடிக்காமல பேசுவதாக தெரிவிக்கின்றனர். இதில், சில நெட்டிசன்கள் விஜய்க்கு ஒரு மண்ணும் தெரியாது என ட்ரோல் செய்து வருவதால் உச்சபச்ச கோபத்தில் உள்ளனர் விஜய் ரசிகர்கள்

சமாளிப்பாரா விஜய்: 2026ஆம் ஆண்டு தேர்தலில் விஜய் தேர்தலில் களமிறங்க உள்ள நிலையில், இன்னும் எந்தெந்த நடிகர்கள் எதிர்த்து பேச போகின்றனர் என தெரியவில்லை. திரையுலகில் இருப்பவர்களே அவருக்கு எதிராக பேசி வருவது ஒரு பக்கம் இருந்தாலும், பாஜக, திமுக, நாதக என அனைத்து கட்சிகளும் அவரை ரவுண்டு கட்டி திட்டி வருகின்றனர். தேர்தல் இன்னும் தொடங்கவே இல்லை. அதற்குள் 1008 பிரச்னைகள் வேறு. இதற்கிடையில் ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார். இதையெல்லாம் விஜய் எப்படித்தான் சமாளிக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X