Karunas Daughter Wedding: கோலாகலமாக நடந்த கருணாஸ் மகள் திருமணம்.. வெளியான பிரத்யேக புகைப்படங்கள்!
சென்னை: தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராகவும் குணசித்திர நடிகராகவும் அசத்தி வரும் நடிகர் கருணாஸின் மகள் டயானா கருணாஸ் திருமணம் சமீபத்தில் கோலாகலமாக நடைபெற்றது. அதன் பிரத்யேக புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன.
இயக்குநர் பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான நந்தா படத்தில் லொடுக்கு பாண்டி கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தவர் நடிகர் கருணாஸ்.
கடந்த ஆண்டு விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான கட்டா குஸ்தி படத்தில் பெண்களை அடிமைகளாக நினைக்கும் புத்திக் கொண்ட நபராக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருப்பார்.

காமெடியன் டு ஹீரோ
நந்தா, திருடா திருடி, வில்லன், அட்டகாசம், பொல்லாதவன் உள்ளிட்ட படங்களில் காமெடியனாக கலக்கி வந்த கருணாஸ் திண்டுக்கல் சாரதி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து அம்பா சமுத்திரம் அம்பானி, ரகளை உள்ளிட்ட பல படங்களில் காமெடி கலந்த ஹீரோவாக நடித்து வந்தார். குணசித்திர கதாபாத்திரங்களில் இவர் சமீப காலமாக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

அசுரன் படத்தில் மகன்
தனுஷ் உடன் திருடா திருடி, புதுக்கோட்டையில் இருந்து சரவணன், பொல்லாதவன் உள்ளிட்ட பல படங்களில் காமெடியனாக நடித்து வந்த நடிகர் கருணாஸ் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் படத்தில் தனது மகன் கென் கருணாஸை சினிமாவில் அறிமுகப்படுத்தினார். முதல் படத்திலேயே சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அப்பாவுக்கு பெருமை சேர்த்தார் கென் கருணாஸ்.

கருணாஸ் மகள் திருமணம்
பாடகி கிரேஸை நடிகர் கருணாஸ் திருமணம் செய்து கொண்ட நிலையில், அந்த தம்பதியினருக்கு கென் எனும் மகனும் டயானா என்கிற மகளும் பிறந்தனர். இந்நிலையில், சமீபத்தில் பெங்களூருவில் உள்ள ஒரு சர்ச்சில் பிரம்மாண்டமான முறையில் தனது மகளின் திருமணத்தை நடிகர் கருணாஸ் நடத்தி வைத்துள்ளார். அதன் பிரத்யேக புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன.

கோட் சூட்டில் கெத்தாக
கோட் சூட் அணிந்து தனது மகளின் கைகளை பிடித்துக் கொண்டு தேவாலயத்தில் மணமகன் அருகே கருணாஸ் கொண்டு செல்லும் அழகிய தருணங்களின் பிரத்யேக புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. நடிகர் கருணாஸ் மகள் மற்றும் மாப்பிள்ளை ருத்விக்கை பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்தி வருகின்றனர்.

ஏஞ்சல் போல டயானா
நடிகர் கருணாஸின் மகள் டயானா வெள்ளை நிற உடையில் ஏஞ்சல் போல திருமணத்தில் மணமகளாக காட்சியளிக்க அப்பாவுக்கும் அம்மாவுக்கும் அவ்வளவு சந்தோஷம். சகோதரன் கென் கருணாஸும் சகோதரி டயானா திருமணத்தில் கோட் சூட் அணிந்து செம க்யூட்டாக போஸ் கொடுத்திருந்தார்.

ஆனந்தக் கண்ணீர்
தனது மகள் திருமணத்தில் பாடகி கிரேஸ் கருணாஸ் கண்களில் கண்ணீரே வந்து விட்டது. அப்பாவும் அம்மாவும் அன்பை பொழிந்து மகளை திருமணம் செய்து கொடுத்துள்ளனர். அதன் புகைப்படங்கள் லிட்டில் ஆன்ட் வெட்டிங் எனும் போட்டோகிராஃபி பக்கத்தில் இடம்பெற்ற நிலையில், சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











