யூத் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் வாங்கிய சம்பளம் என்ன தெரியுமா? பணம் எல்லாம் இல்லைங்க!
சென்னை: நடிகர் கருணாஸ் மகன் கென் கருணாஸ் கதை எழுதி இயக்கி நடித்துள்ள படம் யூத். இந்த படத்தில் தேவதர்ஷினி, சுராஜ் வெஞ்சரமூடு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள். படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படத்தின் புரோமோசன் வேலைகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. படம் வரும் 19ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இப்படி இருக்கையில் படத்திற்கு இசையமைக்க ஜிவி பிரகாஷ்குமாருக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் குறித்து கருணாஸ் தெரிவித்துள்ளார். அது ரசிகர்கள் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
அதாவது அவர் பேசுகையில், கர படத்தில் நான் தனுஷ் உடன் நடித்துள்ளேன். நான் சினிமாவில் ஒரு நடிகருடன் அதிகமாக இணைந்து நடித்தது என்றால் அது தனுஷ் தான். அப்படி இருக்கும்போது கர படத்திற்காக தனுஷ்க்கு தேசிய விருது கொடுத்தால், எனக்கும் தேசிய விருது மத்திய அரசு கொடுக்க வேண்டும். இல்லை என்றால் மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவை சும்மா விடமாட்டேன்.

ஜிவி பிரகாஷ் குமார்: யூத் படத்திற்கு இசையமைக்க ஜி.வி. பிரகாஷ் குமாரை சந்தித்து பேசினேன். அவர் கதையை கேட்டுவிட்டு சம்பளம் எவ்வளவு தருவீர்கள் என்று கேட்கவில்லை. ஆனால் நானோ, நீங்கள் இன்றைக்கு என்ன சம்பளம் வாங்குகிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். அந்த சம்பளத்தை என்னால் கொடுக்க முடியவில்லை என்றாலும், என்னால் முடிந்த அளவுக்கு கொடுக்கிறேன் என்று கூறினேன்.

சம்பளமே இல்லாமல்: நான் பேசுவதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த ஜி.வி. பிரகாஷ் குமார், சம்பளம் எல்லாம் எதுவும் வேண்டாம், உங்களுக்காகவும் கென்னிற்காகவும் நான் சம்பளம் வாங்காமல் இந்த படத்திற்கு இசையமைத்து கொடுக்கிறேன் என்று தெரிவித்தார். ஜிவி பிரகாஷ் குமார் இன்றைக்கு முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைக்கிறார், அதற்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்பது எனக்குத் தெரியும். அப்படி இருக்கையில் அந்த சம்பளத்தை வேண்டாம் என்று சொன்னது 25 ஆண்டுகால எனது சினிமா வாழ்க்கையில் யாரும் என்னிடத்தில் அப்படி சொல்வார்களா என்று தெரியவில்லை. அவருக்கு காலத்திற்கும் நன்றியுடன் இருப்போம்" என்று எமோஷனலாக பேசி உள்ளார். இவரது இந்த பேச்சு தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











