இதுதானா சார் உங்க டக்கு? என்னா ஸ்டைல்.. டிரெண்டி லுக்கில் கருணாஸ், கிரேஸ் கலக்கல் போட்டோஷூட்!

By

சென்னை: நடிகர் கருணாஸ், கிரேஸுடன் இணைந்து வெளியிட்டுள்ள டிரெண்டியான போட்டோஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

'லொடுக்கு பாண்டி'யாக இயக்குனர் பாலாவின் 'நந்தா'வில் காமெடி நடிகராக அறிமுகமானவர் கருணாஸ்.

அதற்கு முன், இசை நிகழ்ச்சிகள் நடத்திய அவர், கானா பாடல்களையும் பாடி வந்தார்.

கதையின் நாயகன்

கதையின் நாயகன்

தொடர்ந்து பல படங்களில் காமெடியனாக கலக்கி வந்த கருணாஸ், பின் கதையின் நாயகனாகவும் சில படங்களில் நடித்தார். அம்பாசமுத்திரம் அம்பானி, திண்டுக்கல் சாரதி உட்பட சில படங்களில் நாயகனாக நடித்த கருணாஸ், இப்போது குணசித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார்.

சீனாதானா டோய்

சீனாதானா டோய்

நடிகர் கருணாஸும் அவர் மனைவி கிரேஸும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். கிரேஸ் கருணாஸ், 'வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்' படத்தில் இடம்பெற்றுள்ள, சிரிச்சு சிரிச்சு வந்தா சீனா தானா டோய் உட்பட பல ஹிட் பாடல்களை பாடியிருக்கிறார். இசை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார்.

புலிப்படை அமைப்பு

புலிப்படை அமைப்பு

இவர்கள் மகன் கென் கருணாசும் படங்களில் நடித்து வருகிறார். அசுரன் படத்தில் தனுஷ் மகனாக கலக்கி இருந்தார். கருணாஸ், முக்குலத்தோர் புலிப்படை என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இதன் மூலம் கடந்த பொதுத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் சேர்ந்த அவர், திருவாடனை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

டிரெண்டி லுக்கில்

டிரெண்டி லுக்கில்

இப்போது எம்.எல்.ஏவாக இருக்கும் அவர், அதிகமான படங்களில் நடிக்கவில்லை. இந்நிலையில், இந்த கொரோனா காலகட்டத்தில் நடிகர், நடிகைகள் மாடர்ன் லுக்கில் டிரெண்டியான போட்டோஷூட்களை நடத்தி வருகின்றனர். நடிகர் நாசர், விவேக் உள்பட பலர் வித்தியாசமான லுக்கில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு இருந்தனர்.

தாடி, கோட் ஷர்ட்

தாடி, கோட் ஷர்ட்

இப்போது எம்.எல்.ஏவாக இருக்கும் அவர், அதிகமான படங்களில் நடிக்கவில்லை. இந்நிலையில், இந்த கொரோனா காலகட்டத்தில் நடிகர், நடிகைகள் மாடர்ன் லுக்கில் டிரெண்டியான போட்டோஷூட்களை நடத்தி வருகின்றனர். நடிகர் நாசர், விவேக் உட்பட பலர் வித்தியாசமான லுக்கில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு இருந்தனர்.

இதுதானா உங்க டக்கு?

இதுதானா உங்க டக்கு?

இதற்கு ரசிகர்கள் ஜாலியாக கருத்துக்களைப் பதிவு செய்து வருகின்றனர். சிலர், அவர் காமெடியை வைத்தே, இதுதானா உங்க டக்கு? என்று கிண்டலாகக் கேட்டுள்ளனர். பலர் அருமை, வேற லெவலில் இந்தப் புகைப்படங்கள் இருப்பதாகக் கூறியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X