கொரோனா பாதிப்பு... கருணாஸின் உடல்நிலை எப்படி இருக்கிறது.. மகன் கென் வெளியிட்ட புதிய தகவல்!
சென்னை: நடிகர் கருணாஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது மகன் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் வலம் வரும் நடிகர் கருணாஸ், கடைசியாக திரௌபதி படத்தில் வழக்கறிஞராக நடித்தார்.
நடிகர் கருணாஸ் திருவாடனைக்காவல் தொகுதி எம்எல்ஏவாகவும் உள்ளார்.

கருணாஸ்க்கு கொரோனா
இந்நிலையில் நடிகர் கருணாஸ்க்கு அண்மையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவரது பாதுகாவலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து கருணாஸுக்கும் கொரோனா சோதனை நடத்தப்பட்டது.

வீட்டில் தனிமை
அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து நடிகர் கருணாஸ் திண்டுக்கல்லில் உள்ள தனது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் நடிகர் கருணாஸின் மகன் கென், தனது தந்தையின் உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மருத்துவமனையில் அனுமதி
அந்த அறிக்கையில், நீங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள் என் தந்தைக்கு கொரோனா பாஸிட்டிவ்வாக உள்ளது. அவர் ஒரு அரசியல்வாதி மற்றும் ஒரு சமூக சேவையாளர் என்பதால் அவர் கடந்த நாட்களில் தனது தொகுதி மற்றும் பல இடங்களுக்கு சென்று வந்தார். இதனால் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை நிலையாக உள்ளது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார், நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசுரன் படத்தின் மூலம்..
மேலும் தனது தந்தையுடன் தொடர்பில் இருந்த அனைவரும் கொரோனா வைரஸ் சோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் கென் வேண்டுகோள் விடுத்துள்ளார். கென், வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











