வெற்றிமாறனுக்கு உதவி இயக்குநராக மாறிய பிரபல நடிகர்.. அதுவும் எந்த படத்திற்கு தெரியுமா?

சென்னை: இயக்குநர் வெற்றிமாறனின் பொல்லாதவன் படத்தில் காமெடி நடிகராக நடித்து அசத்திய கருணாஸ் அசுரன் படத்தில் தனது மகன் கென் கருணாஸை நடிக்க வைத்திருந்தார்.

இந்நிலையில், இயக்குநர் வெற்றிமாறன் அடுத்ததாக இயக்கப் போகும் புதிய படத்தில் உதவி இயக்குநராக நடிகர் கருணாஸ் களமிறங்கப் போவதாக கூறியுள்ளார்.

அரசியலில் ஆர்வம் செலுத்தி வந்த கருணாஸ், இனி முழு நேரமும் சினிமாவில் கவனம் செலுத்த முடிவெடுத்துள்ளது அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.

கருணாஸ்

கருணாஸ்

இயக்குநர் பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 2001ம் ஆண்டு வெளியான நந்தா படத்தில் லொடுக்கு பாண்டி கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமானவர் கருணாஸ். ரஜினிகாந்த், அஜித், விஜய், தனுஷ் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் காமெடி நடிகராக நடித்த கருணாஸ் திண்டுக்கல் சாரதி படத்தின் மூலம் ஹீரோவாகவும் அவதாரம் எடுத்தார்.

வெற்றிமாறன் இயக்கத்தில்

வெற்றிமாறன் இயக்கத்தில்

திருடா திருடி படத்தில் இருந்தே நடிகர் தனுஷ் உடன் நகைச்சுவை நடிகராக ஏகப்பட்ட படங்களில் நடித்து வந்த கருணாஸ் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த பொல்லாதவன் படத்தில் சந்தானத்துடன் இணைந்து காமெடியில் அசத்தி இருப்பார். அந்த படத்தில் இருந்தே வெற்றிமாறன் உடன் நெருங்கிய நட்பு பாராட்டி வருகிறார் கருணாஸ்.

கென் கருணாஸ்

கென் கருணாஸ்

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி தேசிய விருதை தட்டிச் சென்ற அசுரன் திரைப்படத்தில் தனது மகன் கென் கருணாஸை நடிக்க வைத்து இருந்தார் நடிகர் கருணாஸ். ஏற்கனவே தந்தை கருணாஸ் உடன் ரகளபுரம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருந்தார் கென் கருணாஸ்.

உதவி இயக்குநராக

உதவி இயக்குநராக

இந்நிலையில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக உள்ள சூர்யாவின் வாடிவாசல் படத்தில் நடிகர் கருணாஸ் உதவி இயக்குநராக பணியாற்ற முடிவு செய்திருப்பதாக அறிவித்துள்ளது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது. தமிழ் சினிமாவின் பெருமைமிகு படைப்பாக உருவாக உள்ள வாடிவாசல் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றப் போவது மகிழ்ச்சியை தருவதாக தெரிவித்துள்ளார் கருணாஸ்.

அரசியலுக்கு முழுக்கு

அரசியலுக்கு முழுக்கு

முக்குலத்தோர் புலிப்படை எனும் கட்சியை நடத்தி வரும் நடிகர் கருணாஸ் இயக்குநர் வெற்றிமாறன் உடன் உதவி இயக்குநராக பணியாற்ற உள்ள நிலையில், அரசியலில் இருந்து முற்றிலுமாக ஒதுங்கிவிடப் போகிறார் என்கிற பேச்சுக்கள் அடிபட்டுள்ளன. மேலும், கூடிய சீக்கிரமே தனது மகனை ஹீரோவாக வைத்து புதிய படத்தை இயக்கவே தற்போது வெற்றிமாறன் உடன் உதவி இயக்குநராக பணியாற்றப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

வாடிவாசல் ஷூட்டிங் எப்போ

வாடிவாசல் ஷூட்டிங் எப்போ

வரும் ஜூன் மாதம் முதல் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பை இயக்குநர் வெற்றிமாறன் தொடங்க உள்ளார் என்கிற அட்டகாசமான அப்டேட்டும் கிடைத்திருக்கிறது. அதற்குள், பாலா இயக்கத்தில் உருவாகும் படத்தை நடிகர் சூர்யா நடித்து முடித்து விடுவார் என்றும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X