twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நானும் க, அவரும் க: கலாபவன் மணியை நினைத்து கண்கலங்கிய கருணாஸ்

    By Siva
    |

    திருச்சூர்: கேரளாவில் நடந்த கலபாவன் மணி இரங்கல் கூட்டத்தில் கலந்து கொண்ட நகைச்சுவை நடிகர் கருணாஸ் மறைந்த மணியை நினைத்து கண்கலங்கிவிட்டாராம்.

    கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாலக்குடியில் நடிகர் கலாபவன் மணிக்கு இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டது. மணியின் சொந்த ஊரான சாலக்குடியில் உள்ள கார்மெல் ஹெச்.எஸ். ஸ்டேடியத்தில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் நடிகர்கள் மோகன்லால், மம்மூட்டி உள்ளிட்ட ஏராளமான மல்லுவுட் கலைஞர்கள் கலந்து கொண்டு பேசினர். மணியின் இரங்கல் கூட்டத்தில் நடிகர்கள் விக்ரம், கருணாஸ் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.

    கருணாஸ் மேடையில் பேசுகையில்,

    கே

    கே

    இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள என்னை அழைத்ததற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கும் கலாபவன் மணிக்கும் இடையே ஒற்றுமை உள்ளது. எனது பெயர் கருணாஸ். என் இனிஷியல் கே. கலாபவன் மணியின் முதல் எழுத்தும் கே.

    ஒற்றுமை

    ஒற்றுமை

    நானும் கிராமியப் பாடல்கள் பாடும் பாடகன். நானும் பலகுரல் நிகழ்ச்சி நடத்துபவன். பல குரலில் பேசி இன்றைய முதல்வர் ஜெயலலிதா அம்மாவிடம் எல்லாம் பரிசு பெற்றிருக்கிறேன். மணியை போன்று எனக்கும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

    ஜெமினி

    ஜெமினி

    விக்ரம் கூறியது போன்று காசி படத்தை யாராலும் மறக்க முடியாது. ஜெமினி படத்தில் ஓ போடு பாடலை விட உலக தமிழர்கள் உச்சரித்த பெயர் கலாபவன் மணியின் பெயர் தான். அவரது கதாபாத்திரத்தை பற்றி தான் பேசினார்கள்.

    அழுகை

    அழுகை

    படத்தில் நடிக்கும் தைரியத்தை என் மனதில் விதைத்தவர் கலாபவன் மணி அண்ணன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் கருணாஸ். மேடையில் பேசுகையில் கருணாஸ் மணியை நினைத்து கண்கலங்கிவிட்டார்.

    English summary
    Comedian Karunas said that Kalabhavan Mani inspired him to take up acting. Looks like Karunas misses Mani a lot.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X