twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    செல்ஃபிக்கு போஸ் கொடுத்தது ஏன் தெரியுமா? கருணாஸின் விளக்கம் இது!

    By Shankar
    |

    சென்னை: ஊரிலிருந்து வந்த பையன் ஒருவன் ஆசையாகக் கேட்டதால்தான் ஜெயலலிதாவின் இறுதி அஞ்சலியின்போது செல்பிக்கு போஸ் கொடுத்தேன் என்று நடிகர் கருணாஸ் எம்எல்ஏ விளக்கம் அளித்துள்ளார்.

    ராஜாஜி அரங்கில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த மறைந்த முதல்வர் ஜெயலலிதா உடலுக்கு சில அடி தூரம் முன்பாக, ரசிகர் ஒருவருடன் சிரித்தபடி செல்பிக்கு போஸ் கொடுத்துள்ளார் கருணாஸ். இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Karunas's reply for his 'selfie' pics at Amma funeral

    ஜெயலலிதாவால் அரசியலுக்குள் கொண்டுவரப்பட்ட, எம்எல்ஏ அந்தஸ்து பெற்ற கருணாஸ், உணர்ச்சிபூர்வமான அந்த இடத்தில் இதுபோல் சிரித்தபடி செல்பிக்கு போஸ் கொடுத்துள்ளது பலரின் கண்டனத்திற்கும் ஆளாகியுள்ளது.

    இதுகுறித்து தனது விளக்கத்தை கருணாஸ் வெளியிட்டுள்ளார்.

    அதில், "நேற்று ராஜாஜி அரங்கிலும், எம்ஜிஆர் சமாதி செல்லும் வழியிலும் பல பேர் செல்பி எடுக்க வந்தனர். நான்தான் அவர்களைத் திட்டி அனுப்பிவிட்டேன். ஆனால்
    ஒரு பையன் மட்டும் ஊரிலிருந்து வந்திருப்பதாகக் கூறி ரொம்பவும் கேட்டான். அதனால் அவனுடன் போட்டோ எடுத்துக் கொண்டேன். இதுபோன்ற இடங்கலில் இப்படி எடுத்துக் கொள்வது கேவலமானது என்ற உணர்வு மக்களிடம் இல்லையே என்ன செய்வது?

    அம்மாவிடம் நான் வைத்திருந்த விசுவாசம் அவருக்குத் தெரியும். அவரை நல்லடக்கம் செய்த இடத்தில் தரையில் விழுந்து கும்பிட்டு, அங்கிருந்து பிடி மண்ணை அள்ளி வந்து வீட்டில் வைத்திருக்கிறேன். என்னை இவர்கள் விமர்சனம் ஒன்றும் பண்ணாது," என்றார்.

    English summary
    Karunaas gave an explanation that why he has taken a selfie with a boy at lateCM Jayalalithaa's funeral.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X