தனுஷின் அசுரன் படத்தில் நடிக்கும் கருணாஸின் மகன்?
சென்னை: தனுஷின் அசுரன் படத்தில் கருணாஸின் மகன் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
வட சென்னை படத்தை அடுத்து தனுஷ் நடித்து வரும் படம் அசுரன். வெற்றிமாறன் இயக்கி வரும் இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அசுரன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கருணாஸின் மகன் கென் நடிக்கப் போவதாக கூறப்படுகிறது. கென் ஏற்கனவே அழகு குட்டி செல்லம், நெடுஞ்சாலை ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.
கென் கருணாஸ் எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற விபரம் தெரியவில்லை. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை காத்திருக்க வேண்டியது தான்.
அசுரன் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். தனுஷின் கெரியரில் இது முக்கியமான படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











