என் அக்கவுன்ட்ல 50 ஆயிரம் தான் இருக்கு.. 2 லட்சம் கோடி சம்பாதிக்க வருகிறார் விஜய் - கருணாஸ் அட்டாக்!
சென்னை: திமுகவுக்கு ஆதரவாக பேசி வரும் நடிகரும் முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவருமான கருணாஸ், "விஜய் 200 கோடியை விட்டுட்டு வருகிறார் என்றால் அவர், 2 லட்சம் கோடியை சம்பாதிக்க வருகிறார்" என பேசியுள்ளார்.
லொடுக்கு பாண்டியாக சினிமாவில் அறிமுகமாகி காமெடி நடிகராக மாறிய கருணாஸ் திண்டுக்கல் சாரதி, அம்பாசமுத்திரம் அம்பானி உள்ளிட்ட படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான ஹரிஷ் கல்யாணின் டீசல் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

நடிகர் விஜய்யுடன் புதிய கீதை படத்தில் நடித்த கருணாஸ் திருமலை மற்றும் புலி உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். அரசியலுக்கு வந்துள்ள தவெக தலைவர் விஜய்யை தற்போது திமுகவுக்கு ஆதரவாக பேசி வரும் கருணாஸ் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
விஜய்யிடம் 2000 கோடி இருக்கு: நடிகரும் தவெக தலைவருமான விஜய்யிடம் 2000 கோடி சொத்து உள்ளதாக நடிகர் கருணாஸ் மேடையில் பேசியுள்ளார். மேலும், விஜய் ஒரு சங்கி என்றும் அவருக்கு ஆதரவு அளித்தால் பாஜக தமிழ்நாட்டில் கால் பதித்து விடும் என்றும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கும் வரை அது ஒரு காலத்திலும் நடக்காது என ஆவேசமாக கருணாஸ் பேசியுள்ளார்.

50 ஆயிரம் தான் இருக்கு: 55 வயதாகும் நடிகரும் அரசியல்வாதியுமான கருணாஸ் தனது அக்கவுண்ட்டில் வெறும் 50 ஆயிரம் தான் உள்ளது. நீங்க வேணும்னா செக் பண்ணிக்கோங்க என போனை மக்கள் முன் நீட்டிவிட்டு அடுத்த டாபிக்கிற்குள் சென்று விட்டார். 2001ம் ஆண்டு பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான நந்தா படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி பல படங்களில் ஹீரோவாக நடித்து, முக்குலத்தோர் புலிப்படை கட்சியை நடத்தி வரும் கருணாஸிடம் வெறும் 50 ஆயிரம் தான் உள்ளதா என விஜய் ரசிகர்கள் கமெண்ட் பக்கத்தில் கேள்வி எழுப்பி கலாய்த்து வருகின்றனர்.

2 லட்சம் கோடி சம்பாதிக்க வராரு: விஜய் 200 கோடி சம்பளத்தை விட்டுட்டு வருகிறார் என்றால், சும்மா வரவில்லை. 2 லட்சம் கோடியை சம்பாதிக்கத்தான் அரசியலுக்கு வருகிறார் என நான் சொல்கிறேன் என கருணாஸ் தாக்கி பேசியதை கேட்ட தவெக தொண்டர்களும் விஜய் ரசிகர்களும் அப்போ நீங்க இத்தனை வருஷம் எத்தனை கோடி சம்பாதிச்சீங்கன்னு சொல்லுங்க என கேள்வி எழுப்பி உள்ளனர். மேலும், இத்தனை ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் திமுக குடும்பம் எத்தனை லட்சம் கோடி சம்பாதித்தது என்றும் சொல்லி விடுங்களேன் என அட்டாக் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











