வடிவேலு மாதிரி நடின்னு சொன்னார்.. ஒரிஜினல் சூப்பர் ஸ்டார் விஜயகாந்த் தான்.. கருணாஸ் கர்ஜனை!

சென்னை: விஜயகாந்த் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் கருணாஸ் ஆரம்பத்தில் இருந்தே விஜயகாந்த்தால் தான் சினிமாவில் வளர்ந்து வந்தேன். ஒரு சாதாரண துணை நடிகனை கூட பெரிய நடிகனாக சினிமாவில் வளர வேண்டும் என நினைத்தவர் விஜயகாந்த் என பேசினார். ஒரிஜினல் சூப்பர் ஸ்டார் விஜயகாந்த் தான் என பேசி அரங்கத்தையே அலற விட்டு விட்டார் கருணாஸ்.

நடிகர் சங்கம் சார்பாக மறைந்த விஜயகாந்துக்கு ஜனவரி 19ம் தேதி நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்படும் என விஷால் அறிவித்ததை போலவே இன்று நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. கமல்ஹாசன், விக்ரம், கார்த்தி, விஷால், ஜெயம் ரவி, நாசர், யோகி பாபு மற்றும் கருணாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விஜயகாந்துக்கு புகழஞ்சலி செலுத்தினர்.

Karunas says Vijayakanth is the Original Super Star


வடிவேலு மாதிரி நடின்னு சொன்னார்: மறைந்த விஜயகாந்த் திருவுருவப் படத்துக்கு மலர்த்தூவி அஞ்சலி செலுத்திய பின்னர் பேச ஆரம்பித்த நடிகர் கருணாஸ் சினிமாவில் பெரியண்ணா படத்தில் இருந்தே விஜயகாந்த்துடன் சேர்ந்து பழகும் வாய்ப்பு கிடைத்தது. ஆரம்பத்தில், சாதாரண துணை நடிகனாக இருந்து வந்த என்னிடம் வடிவேலு மாதிரி எல்லா படங்களிலும் நடி. உனக்குன்னு ஏதாவது ஒரு படம் ஒரு கேரக்டர் செட்டாகும் என சொல்லி சொல்லி என்னை உயர்த்தியவர் விஜயகாந்த் என கருணாஸ் உருக்கமாக பேசினார்.

சூப்பர் ஸ்டார் விஜயகாந்த்: புரட்சிக் கலைஞர், கருப்பு எம்ஜிஆர் என கொண்டாடப்பட்ட விஜயகாந்த் தான் ஒரிஜினல் சூப்பர் ஸ்டார் என கர்ஜித்து விட்டு நடிகர் கருணாஸ் மேடையில் இருந்து இறங்கி சென்றார் கருணாஸ். நினைவேந்தல் நிகழ்ச்சியில் சினிமா பிரபலங்கள் பலரும் பங்கேற்று மெளன அஞ்சலி செலுத்தினார்.

கண் கலங்கிய விஜயகாந்த் மகன்கள்: நடிகர் சங்கம் சார்பில் பிரம்மாண்டமாக நடைபெற்ற நினைவேந்தல் கூட்டத்தில் கலந்து கொண்ட விஜயகாந்த் மகன்கள் இருவரும் விஜயகாந்தின் ஏவிக்கள் போடும் போதும் பிரபலங்கள் விஜயகாந்த் பற்றி நெகிழ்ச்சியுடன் பேசும் போதும் கண் கலங்கிய முகத்துடன் இருந்த காட்சிகளும் ரசிகர்களை நெகிழ வைத்தன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X