அம்மாவிற்கு 50 வயசு ஆச்சு.. பிறந்த நாளுக்கு கென் கருணாஸ் செய்த விஷயம்.. நெகிழ்ந்த ரசிகர்கள்!
சென்னை: பாடகியும், நடிகையுமான கிரேஸ் கருணாஸ் இன்று தனது 50வது பிறந்த நாளை கொண்டாடி உள்ளார். பிறந்த நாள் போட்டோவை கேன்ஸ் கருணாஸ் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். பலரும் கிரேசுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
கிரேஸூக்கு சிறு வயதிலேயே பாடல்கள் மீது ஆர்வம் இருந்ததால், தனது 5 வயதிலேயே, பூந்தமல்லியில் உள்ள CSI சர்ச்சில் பாடகர் குழுவுடன் இணைந்து பாடினார். அதைத்தொடர்ந்த கல்லூரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கிரேஸ் பாடி உள்ளார். அந்த விழாவில் நடிகர் கருணாஸ் கலந்து கொண்டுள்ளார். கிரேஸ் பாடிய பாடலை கேட்டு ரசித்து பாராட்டி உள்ளார். அப்போதில் இருந்து இருவரும் நல்ல நண்பர்களாக பழகி பின் நாளில் அது காதலாக மாறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

கிரேஸ் கருணாஸ்: அதன் பிறகு தான் நடிகர் கருணாஸ், கமல்ஹாசன் நடித்த வசூல் ராஜா MBBS படத்தில் வரும் "சீனா தானா டோய்" என்ற பாடலை பாடுவதற்கான வாய்ப்பை வாங்கி கொடுத்தார். அதைத் தொடர்ந்து கிரேஸ், தேவதையைக் கண்டேன் படத்தில்,"விளக்கு ஒண்ணு", கற்க கசடற படத்தில் "ஆலப்புழா அம்மணி அல்லோ", ஆறு படத்தில் "பிரியா விடு மாமு", சண்டை படத்தில் "வாடி என் கப்பக் கிழங்கே" போன்ற பாடல்களை பாடி உள்ளார். இவர் பாடகியாக மட்டுமில்லாமல், தனுஷ் நடித்த திருவிளையாடல் ஆரம்பம், கதகளி போன்ற திரைப்படத்தில் நடித்தும் இருக்கிறார்.
50வது பிறந்த நாள்: திரைப்படங்கள் மட்டுமில்லாமல், விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளியில் கலந்து கொண்டு சிறப்பாக சமைத்து இரண்டாம் இடத்தை பெற்றார். அதே தொலைக்காட்சியில் கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்தார். கிரேஸ், கருணாஸ் தம்பதிகளுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கருணாசின் மகன் தனுஷ் நடித்த அசுரன் படத்தில் தனுஷின் மகனாக முக்கிய ரோலில் நடித்திருந்தார். அது முதல் திரைப்படமாக இருந்தாலும், அந்த படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. அந்த படத்தை தொடர்ந்து, தற்போது பல படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் கிரேஸின் 50வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்ட நிலையில் கென் கருணாஸ் தனது அம்மாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லி மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளார்.


Click it and Unblock the Notifications











