4 தமிழ் ஹீரோயின்கள் இணைந்து நடிக்கும் "கருங்காப்பியம்" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!
சென்னை : யாமிருக்க பயமே, கவலை வேண்டாம், காட்டேரி ஆகிய படங்களை இயக்கி இருந்த டிகே இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் கருங்காப்பியம்.
காஜல் அகர்வால்,ரெஜினா கெஸன்ட்ரா, ஜனனி, ரைசா வில்சன் நான்கு தமிழ் ஹீரோயின்கள் ஒன்றாக இணைந்து இதில் நடித்துள்ளனர்.
காமெடி கலந்த ஹாரர் திரைப்படமாக உருவாகியுள்ள கருங்காப்பியம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இப்போது வெளியாகி சக்கை போடு போட்டு வருகிறது.

அழுத்தமான வெற்றி
இயக்குனர் டிகே தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார். யாமிருக்க பயமே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான டீகே முதல் படத்திலேயே அழுத்தமான வெற்றியை கொடுத்ததைத் தொடர்ந்து ஜீவாவின் கவலை வேண்டாம் மற்றும் வைபவ் நடித்துள்ள காட்டேரி ஆகிய படங்களை இயக்கியுள்ளார். காட்டேரி திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில் கொரோனா சூழல் காரணமாக வெளியீட்டு தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதில் வரலட்சுமி, ஆத்மிகா மற்றும் சோனம் பாஜ்வா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர் ஹாரர் படமாக உருவாகியுள்ளது.

4 தமிழ் ஹீரோயின்களை
காட்டேரி திரைப்படம் வெளியாவதற்கு முன்பாகவே இயக்குனர் டிகே தன்னுடைய அடுத்த படத்தின் வேலைகளையும் முடித்து டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். முதல்முறையாக 4 தமிழ் ஹீரோயின்களை வைத்து காமெடி கலந்த ஹாரர் திரைப்படமாக உருவாகி இருக்க "கருங்காப்பியம்" என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. டைட்டிலே மிரட்டலாக இருக்க இதில் நடிகைகள் காஜல் அகர்வால், ரெஜினா கெஸன்ட்ரா, ஜனனி, ரைசா வில்சன் ஆகிய நான்கு ஹீரோயின்கள் லீட் ரோலில் நடிக்கின்றனர்.

கார்மேகங்கள் சூழ்ந்திருக்க
மேலும் கலையரசன், யோகி பாபு, கருணாகரன், ஜான் விஜய், வி ஜே பார்வதி இவர்களுடன் ஈரான் நடிகை நொய்ரிகா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் காஜல் அகர்வால் நெற்றியில் ஸ்டிக்கர் பொட்டுடன் இருக்க அவரைத் தொடர்ந்து ரெஜினா கெஸன்ட்ரா, ஜனனி, நொய்ரிகா ஆகியோர் நிற்கின்றனர். போஸ்டர் முழுவதும் கார்மேகங்கள் சூழ்ந்திருக்க பார்க்கவே திகில் ஏற்படுத்துகிறது.

இணைந்து தயாரித்துள்ளன
"கருங்காப்பியம்" படத்தை பேவ் என்டர்டெய்ன்மென்ட்ஸ், ஏ.பி. இண்டர்நேஷன்ல் மற்றும் வெற்றிவேல் டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திடீரென வெளியாகியுள்ள இதன் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.


Click it and Unblock the Notifications