Karuppu: கருப்பசாமினா சும்மாவா? கருப்பு 3 நாளில் அதிரடி வசூல்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
சென்னை: நடிகர் சூர்யா, த்ரிஷா நடித்த கருப்பு திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் மே 14ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சில நிதி தொடர்பான பிரச்சினைகளால் படம் திட்டமிட்ட 14ந் தேதி வெளியாகாமல், அடுத்த நாள் மே 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வசூலை அள்ளி வரும் நிலையில், படத்தின் அதிகாரபூர்வ வசூல் குறித்த தகவலை தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
ஆர்.ஜே.பாலாஜியின் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே ஆரம்பத்திலிருந்தே மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்பட்டது. குறிப்பாக படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் இருந்ததால், இந்த படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் தொடர்ந்து அப்டேட்டை கேட்டு வந்தனர். ரசிகர்களின் இரண்டு ஆண்டு காத்திருப்பு வீண் போகாத வகையில் தற்போது படம் வெளியாகி நல்ல வசூலை அள்ளி வருகிறது.

கருப்பு: கிராம எல்லைத் தெய்வமான கருப்பசாமியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் சூர்யாவிற்கு கம்பேக் கொடுக்கும் படமாக அமைந்து இருப்பதாக படம்பார்த்த ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். தியேட்டரில் படம் பார்த்த ரசிகர்கள் சிலருக்கு கருப்பு சாமி ஆடியதையும் பார்க்க முடிந்தது. முதல் நாளில் இருந்தே படத்திற்கு மக்களிடம் இருந்து நல்ல விமர்சனம் வந்து கொண்டு இருப்பதால் படம் வசூலை அள்ளி வருகிறது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: அந்த வகையில், கருப்பு படம் வெளியான 3 நாட்களில் உலக அளவில் ரூ 147 கோடியை வசூலித்து இருப்பதாக தயாரிப்பு நிறுவனமான Dream Warrior Pictures தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் வெயிட்டுள்ளது. படத்திற்கு தொடர்ந்து நல்ல வரவேற்பு இருந்து வருவதால் படம் மேலும் வசூலை பெற வாய்ப்பு உள்ளது. சூர்யா நடித்த கங்குவா, ரெட்ரோ பட தோல்விக்கு பிறகு வெளியாகி இருக்கும் கருப்பு படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து வீடியோ வெளியிட்ட சூர்யா கண்ணுகளா... செல்லங்களா... என் சாமிகளா உங்களால் தான் இந்த வெற்றி என நெகிழ்ச்சியுடன் பேசி இருந்தார்.


Click it and Unblock the Notifications