Karuppu: மாஸ்டர் படத்தை ஓரம் கட்டிய கருப்பு.. அடுத்த டார்கெட் லியோ தான்.. கெத்து காட்டும் சூர்யா

சென்னை: தமிழ் திரையுலகில் பாக்ஸ் ஆபீஸ் சாதனைகளும், ரசிகர்களின் கொண்டாட்டங்களும் எப்போதுமே ஒரு தனித்துவமான அரசியல் தளம் போன்றது தான். வசூல் வேட்டையில் எந்தெந்த படங்கள் எந்தெந்த சாதனைகளை முறியடிக்கின்றன என்பதைப் பார்ப்பதே தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு பெரிய திருவிழா போல மாறிவிடுகிறது. அந்த வகையில், தற்போது கோலிவுட்டின் ஒட்டுமொத்த கவனமும் நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியாகி மாபெரும் பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றுள்ள 'கருப்பு' படத்தின் மீது திரும்பியுள்ளது.

திரையரங்குகளில் வெளியானது முதல் வசூலிலும், ரசிகர்களின் எண்ணிக்கையிலும் 'கருப்பு' திரைப்படம் புதிய புதிய மைல்கற்களை எட்டி வருகிறது. தமிழ் திரையுலகைப் பொறுத்தவரை தியேட்டருக்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கை தான் ஒரு படத்தின் உண்மையான வெற்றியைத் தீர்மானிக்கிறது. அந்த வகையில், சூர்யாவின் 'கருப்பு' திரைப்படத்தை தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான ரசிகர்கள் திரையரங்குகளுக்குச் சென்று பார்த்து ரசித்துள்ளனர் என்ற தகவல் கோலிவுட் தளத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Karuppu Beats Master in Tamil Nadu Suriya s Blockbuster Now Eyes Leo s Massive Record

இதன் மூலம், நடிகர் விஜய்யின் நடிப்பில் வெளியாகி வசூல் சாதனை படைத்த 'மாஸ்டர்' படத்தின் ஒட்டுமொத்த சாதனையை 'கருப்பு' திரைப்படம் தற்போது அதிகாரப்பூர்வமாக முறியடித்து, ரசிகர்களின் எண்ணிக்கையில் தமிழ்நாட்டு அளவில் ஓரங்கட்டியுள்ளது. தமிழ்நாட்டில் அதிகப்படியான மக்களால் பார்க்கப்பட்ட திரைப்படம் என்ற வரலாற்றுச் சாதனையை விஜய்யின் 'லியோ' திரைப்படம் தான் தன் வசம் வைத்துள்ளது. லியோ திரைப்படத்தை தியேட்டர்களில் சுமார் ஒரு கோடியே 7 லட்சம் பேர் பார்த்து இதுவரை முதலிடத்தில் வைத்துள்ளனர்.

அடுத்த டார்கெட் லியோ: பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் கூறுவது என்ன?: தற்போது 'மாஸ்டர்' படத்தின் சாதனையை அசால்ட்டாக முறியடித்துள்ள 'கருப்பு', அடுத்ததாக 'லியோ' படத்தின் அசைக்க முடியாத சாதனையையும் முறியடிக்குமா? என்ற பெரும் ஆவலும் எதிர்பார்ப்பும் சூர்யா ரசிகர்கள் மத்தியிலும், சினிமா வர்த்தக வட்டாரத்திலும் காட்டுத்தீயாய் எழுந்துள்ளது. இன்னும் சில நாட்களில் லியோவின் பார்வையாளர்கள் எண்ணிக்கையையும் கருப்பு படம் தாண்டிவிடும் என நம்பப்படுகிறது.

கருப்பு வசூல்: வசூல் ரீதியாகவும் 'கருப்பு' திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 170 கோடி ரூபாய்க்கும் மேல் அள்ளிக்குவித்து விநியோகஸ்தர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த இமாலய வசூல் மூலம், தயாரிப்பாளர்களுக்கு சுமார் 80 கோடி ரூபாய் வரை 'ஷேர்' கிடைக்கும் என்று சினிமா வர்த்தக நிபுணர்கள் கணித்துள்ளனர்.

Karuppu Beats Master in Tamil Nadu Suriya s Blockbuster Now Eyes Leo s Massive Record

ரசிகர்கள்: சமூக வலைத்தளங்களில் சூர்யாவின் ரசிகர்கள் இந்த பாக்ஸ் ஆபீஸ் சாதனையை கொண்டாடி வருகிறார்கள். 'மாஸ்டர்' காலி, அடுத்த டார்கெட் 'லியோ' தான் என சூர்யா ரசிகர்கள் கெத்து காட்டி வரும் நிலையில், இந்த பாக்ஸ் ஆபீஸ் ரேஸ் கோலிவுட்டில் தற்போதைய ஹாட் டாபிக்காக மாறியுள்ளது. சூர்யா ரசிகர்களுக்கு விஜய் ரசிகர்களும் ஜன நாயகன் வருது வெயிட் பண்ணுங்க ப்ரோ என்று பதில் அளித்து வருகிறார்கள். விஜய்யின் ஜன நாயகன் வரும் 22ஆம் தேதி வெளியாக அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X