Karuppu Day 4 Box Office - கருப்பு 4வது நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?.. பாக்ஸ் ஆஃபிஸ் நிலை என்ன?
சென்னை: சூர்யா - ஆர்.ஜே.பாலாஜி கூட்டணியில் உருவாகியிருக்கும் கருப்பு திரைப்படம் கடந்த 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. நீண்ட வருடங்களாக எதிர்பார்த்திருந்த ஒரு தரமான கமர்ஷியல் ஹிட் இந்தப் படத்தின் மூலம் சூர்யாவுக்கு கிடைத்திருக்கிறது. அதை நினைத்து அவரது ரசிகர்களும் உச்சக்கட்ட மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள். இந்நிலையில் நான்காவது நாளான நேற்று கருப்பு திரைப்படம் செய்திருக்கும் வசூல் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
ஆர்ஜேவாக பயணத்தை ஆரம்பித்து அதனையடுத்து நடிகர், இயக்குநராக மாறியவர் ஆர்.ஜே.பாலாஜி. அவர் இப்போது சூர்யாவை ஹீரோவாக வைத்து கருப்பு படத்தை இயக்கியிருக்கிறார். முதலில் இந்தப் படத்தில் ஹீரோவாக விஜய்யைத்தான் நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தார் இயக்குநர். ஆனால் அவர் விலகிவிட சூர்யா உள்ளே வந்தார். ஹீரோயினாக திரிஷா நடித்தார். இரண்டு பேரும் பல வருடங்களுக்கு பிறகு ஒரு படத்தில் ஜோடியாக நடித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ரிலீஸான படம்: முதலில் 14ஆம் தேதி ரிலீஸாவதாக இருந்தது. அதற்கான அறிவிப்புகள் எல்லாம் வந்து வேலைகளும் மும்முரமடைந்தன. ஆனால் சில காரணங்களால் ரிலீஸானது தள்ளிப்போனது. ரிலீஸ் தள்ளி போனதும் கலங்கிவிட்டார் இயக்குநர். ஒருவழியாக 15ஆம் தேதி ரிலீஸானதும்தான் அவருக்கு மூச்சே வந்திருக்கும். ஏனெனில் இந்தப் படத்தை ரொம்பவே நம்பியிருந்தார். ஹிட்டடித்துவிட்டால் இனிமேல் அடுத்தடுத்து பெரிய ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் வாய்ப்பை பெறலாம் என்ற சூழ்நிலையும் நிலவியது.
படம் சூப்பர் ஹிட்: அவர் எதிர்பார்த்தபடியே படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்திருக்கிறது. நாட்டார் தெய்வ வழிபாடு உள்ளிட்ட விஷயங்களை எல்லாம் வைத்து; சூர்யாவுக்கு தேவையான கமர்ஷியல் ப்ளஸ் பக்கா மாஸ் காட்சிகளை கலந்து ரசிகர்களுக்கு விருந்தே வைத்துவிட்டார். இப்படத்தின் வெற்றியை பார்த்து முதல் நாளிலேயே ரோகிணி திரையரங்கில் ஆர்.ஜே.பாலாஜி உணர்ச்சிவசப்பட்டு கண்கள் கலங்கி கத்தியது நினைவுகூரத்தக்க்து. சூர்யா ரசிகர்களும் நிம்மதியடைந்தார்கள். இப்படி ஒரு ஹிட்டைத்தான் நாங்கள் எதிர்பார்த்தோம் எனவும் அவர்கள் ஆனந்த கண்ணீர் வடித்தார்கள்.
கவனம் பெற்ற பாலாஜி: பெரிய ஹீரோக்களில் ஒருவரான சூர்யாவை வைத்து இப்படி ஒரு ஹிட் படத்தை கொடுத்துவிட்டால்; கோலிவுட்டில் மேற்கொண்டு வெளிச்சம் பெற்றிருக்கிறார் இயக்குநர். இனிமேல் இவரை நம்பி கால்ஷீட் கொடுக்கலாம்; கதையாக மட்டுமின்றி மேக்கிங்கிலும் பட்டையை கிளப்புவார் என்ற நம்பிக்கை பெரிய ஹீரோக்களிடம் வந்திருக்கலாம். ஆகமொத்தம் பல வருடங்கள் எதிர்பார்த்திருந்த வெற்றி சூர்யாவுக்கு கருப்பு படத்தின் மூலம் கிடைத்திருக்கிறது.
வசூல் நிலவரம்: விமர்சன ரீதியாக பெரும்பாலானவர்களிடம் சூப்பர் வரவேற்பை பெற்றிருக்கும் படம் வசூலிலும் சக்கைப்போடு போடுகிறது. நான்காவது நாளான நேற்று இப்படம் இந்தியாவில் மட்டும் 14.30 கோடி ரூபாயை வசூலித்திருப்பதாக Sacnilk இணையதளம் தெரிவித்திருக்கிறது. உலக அளவில் நேற்று நான்கு கோடி ரூபாயை வசூலித்த கருப்பு; இதுவரை மொத்த உலகளவில் 141.30 கோடி ரூபாயை எடுத்து பாக்ஸ் ஆஃபிஸில் ருத்ர தாண்டவம் ஆடி வருகிறதாம். நிச்சயம் இனி வரும் நாட்களிலும் வசூல் சீராக சென்று 200 கோடி ரூபாயை தொடும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள் ரசிகர்கள்.


Click it and Unblock the Notifications
