Karuppu Box Office Day 3: 18ஆம் படி கருப்புக்கு அள்ளிக் கொடுக்கும் ரசிகர்கள்.. கருப்பு 3ஆவது நாள் வசூல்!
சென்னை: சூர்யா, த்ரிஷா, நட்ராஜ், இந்திரன்ஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி கடந்த 15ஆம் தேதி வெளியான படம் கருப்பு. படத்தை ஆர்.ஜே. பாலாஜி எழுதி இயக்கியது மட்டும் இல்லாமல், வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். படம் பார்த்த பலரும் படம் நன்றாக இருக்கிறது என்று பாராட்டி வருவதால் படத்திற்கு வசூல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் படத்தின் முதல் மூன்று நாட்கள் எந்த அளவுக்கு வசூல் நிலவரம் என்பது குறித்து பார்க்கலாம்.
பல ஆண்டுகளுக்குப் பின்னர் நடிகர் சூர்யாவுக்கு கிடைத்த முதல் தியேட்டரிக்கல் வெற்றியாக கருப்பு படம் அமைந்துள்ளது. சூரரைப் போற்று மற்றும் ஜெய் பீம் என இரண்டு படங்களும் சூர்யாவுக்கு வெற்றிகளையும் விருதுகளையும் பாராட்டுக்களையும் குவித்துக் கொடுத்திருந்தாலும், அவை எல்லாம் தியேட்டரில் வெளியாகாமல், நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி இருந்தது. இப்படி இருக்கையில் தியேட்டரில் சூர்யாவுக்கு மிகப்பெரிய வெற்றியை ஈட்டிக் கொடுத்த படமாக கருப்பு படம் மாறியுள்ளது.

படம் தொடங்கி சுமார் 30இல் இருந்து 40 நிமிடங்களுக்குப் பின்னர் தான் சூர்யாவே வருகிறார், மொத்தமாகவே படத்தில் சுமார் 10 முதல் 15 காட்சிகளுக்கு தான் சூர்யா வருகிறார். க்ளைமாக்ஸில் கருப்பசாமியாக ஒரு ஆட்டம் போடுகிறார். மொத்தமாக நான்கு சண்டைக் காட்சிகள் படத்தில் இடம் பெற்றாலும் அது சூர்யா ரசிகர்களை ஆர்ப்பரித்துக் கொண்டாட வைத்துள்ளது.
பற்றாக்குறை: சாய் அபயங்கரின் பின்னணி இசை படத்தை கொண்டாட்ட லெவலுக்கு எலிவேட் செய்துள்ளது என ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். மொத்ததில் படம் சூர்யா ரசிகர்களுக்கு ஒரு திருவிழா. ஆனால் படத்தில் வரும் கோர்ட் ரூம் காட்சிகள், கருப்பசாமி காட்சிகள் என இவை இரண்டுமே பற்றாக்குறையாகவே உள்ளன. அதிலும் கோர்ட் ரூம் காட்சிகளை இன்னும் சுவாரஸ்யமாக வைத்திருந்தால் படம் ரீவாச்சிங்கிற்கு தகுந்த படமாக கூட மாறி இருக்கலாம். மேலும் கருப்பசாமியை காட்சி படுத்தும் காட்சிகளும் இன்னும் இணக்கமானதாக இல்லை. கருப்பு சிவப்பு என்ற கலரிங்கில் அந்த காட்சிகளை படமாக்கிவிட்டதால் அவை அந்த காட்சிகளின் தாக்கத்தை வெகுவாக குறைத்துவிட்டது என்ற விமர்சனமும் உள்ளது.

மூன்றாவது நாள் வசூல்: ஆனாலும் படம் ரசிகர்களுக்கு பிடித்து, அடுத்து பொது மக்கள் கொண்டாடும் அளவுக்கு மாறிவிட்டதால் படத்தின் வசூல் திருப்திகரமாக இருப்பதாக படக்குழு மகிழ்ச்சியில் உள்ளது. படம் முதல் மூன்று நாட்களில் உலக அளவில் ரூபாய் 120.75 கோடிகள் வசூலித்திருக்கும் என்று பாக்ஸ் ஆபீஸ் வசூல் தகவல்களை வெளியிடும் சாக்நிக் வலைதளம் தெரிவித்துள்ளது. வார நாட்களிலும் படத்திற்கு நல்ல வசூல் கிடைக்கும் என்று படக்குழுவினர் எதிர்பார்க்கின்றனர்.


Click it and Unblock the Notifications