Karuppu Box Office Day 6: கருப்பா.. நீ கை விடலப்பா.. 6 நாளில் இவ்வளவு அள்ளிக் கொடுத்துட்டியே!
சென்னை: சூர்யா, த்ரிஷா, இந்திரன்ஸ், ஆர்ஜே பாலாஜி, நடராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் கருப்பு. படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். படத்தில் நடித்தது மட்டும் இல்லாமல், கதை, திரைக்கதை அமைத்து இயக்கவும் செய்திருந்தார் ஆர்ஜே பாலாஜி. படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் படம் முதல் ஆறு நாட்களில் எவ்வளவு வசூல் குவித்தது என்று இந்த தொகுப்பில் காணலாம்.
பல ஆண்டுகள் காத்திருப்புக்குப் பின்னரும் பல சறுக்கல்களுக்குப் பின்னரும் சூர்யாவுக்கு கிடைத்த முதல் தியேட்டரிக்கல் வெற்றி கருப்பு. அவரது கடைசி படமான ரெட்ரோ கூட தோல்வியைத் தவிர்த்தது என்று குறிப்பிடலாமே தவிர, வெற்றியை ஈட்டியது என்று குறிப்பிட முடியாது. ஆனால் அதற்கும் முந்தைய படங்கள் அடி மேல் அடி கொடுத்துக் கொண்டே இருந்தது.

சூர்யா: அப்படி இருந்தாலும் ரசிகர்களுக்கு சூர்யா மீது இருந்த நம்பிக்கையால் அவரது படங்களுக்கான ஓப்பனிங் மட்டும் குறையவே இல்லை. இப்படி பல ஆண்டுகளாக சூர்யாவுக்காக உடன் நின்ற அவரது அன்பான ரசிகர்களுக்கு கருப்பு படம் ஒரு திரை விருந்தாக மாறிவிட்டது. கருப்பு படத்தில் மொத்தமாகவே சூர்யா சுமார் 15 காட்சிகள் தான் வருவார் என்பது போல இருக்கும், ஆனால் கிளைமாக்ஸில் அவர் கருப்பனாக ஆடும் ஆட்டம் மொத்த தியேட்டரையும் ஒரு ஆட்டு ஆட்டி விட்டது.
6 நாள் வசூல்: சாய் அபயங்கரின் இசை படம் பார்க்க ரசிகர்கள் பலரையும் அருள் வந்து ஆட வைத்துவிட்டது. இப்படி இருக்கையில் படம் முதல் மூன்று நாட்களில் ரூபாய் 147 கோடிகள் வசூலித்ததாக படக்குழு ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இது மட்டும் இல்லாமல், கடந்த 15ஆம் தேதி வெளியான படம் முதல் ஆறு நாட்களில் ரூபாய் 175 கோடிகளை மொத்தமாக வசூலித்திருக்கும் என்று டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் முதல் ஆறு நாளில் இந்தியாவில் மட்டும் எப்படியும் ரூயா 100 கோடிகளுக்கு மேல் வசூல் ஆகி இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இது மட்டும் இல்லாமல், படத்திற்கு வரும் வார இறுதிகளிலும் பெரிய அளவில் வசூல் கிடைக்கும் என்பதால் படக்குழு மகிழ்ச்சியாக உள்ளது.



Click it and Unblock the Notifications