நேற்று ஒரே அழுகை.. இன்று செம சந்தோஷம்.. கருப்பு ஆர்.ஜே. பாலாஜிக்கு உச்சக்கட்ட வரவேற்பு

சென்னை: சூர்யா நடிப்பில் ஆர்ஜே பாலாஜி இயக்கியிருக்கும் திரைப்படம் கருப்பு. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடித்திருக்கிறார். நேற்றே இப்படம் ரிலீஸாவதாக இருந்தது. ஆனால் தயாரிப்பு தரப்பான ட்ரீம் வாரியர்ஸ் கம்பெனிக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டதால் கடைசி நேரத்தில் ரிலீஸ் தள்ளிப்போனது. இந்நிலையில் இன்று படமானது உலகம் முழுவதும் ரிலீஸாகியிருக்கிறது.

சூர்யா - ஆர்.ஜே.பாலாஜி கூட்டணியில் உருவாகியிருக்கும் திரைப்படம் கருப்பு. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடித்திருக்கிறார். மேலும் பலர் நடித்துள்ளார்கள். சூர்யா கடந்த சில வருடங்களாகவே தேடிக்கொண்டிருந்த வெற்றி கண்டிப்பாக இதில் கிடைக்கும் என நம்பிக்கை வைத்திருந்தார்கள். படமானது நேற்று ரிலீஸாக வேண்டியிருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் சில பிரச்னைகள் வந்ததன் காரணமாக படமானது ரிலீஸாகவில்லை. அது பாலாஜி உள்ளிட்டோரை ரொம்பவே அப்செட் ஆக்கியது.

Karuppu Finally Releases Worldwide RJ Balaji Arrives Smiling After Emotional Breakdown
Photo Credit:

எமோஷனலான பாலாஜி: அவர் நேற்று வெளியிட்ட ஒரு வீடியோவில், "அனைவருக்கும் வணக்கம். காரில் இருந்து இன்னொரு அப்டேட். இதுவே கடைசியாக இருக்கும் என நம்புகிறேன். அனைத்து ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இப்படி நடந்திருக்கக்கூடாது. படம் பார்ப்பதற்காக நீண்ட தூரம் பயணம் செய்து காலை ஒன்பது மணிக்கே தியேட்டருக்கு சென்ற அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

Also Read
விஜய் பெர்சனல் வாழ்க்கை.. வருத்தத்தில் இருக்கும் சித்தி.. இப்படி ஓபனா போட்டு உடைச்சிட்டாங்களே
விஜய் பெர்சனல் வாழ்க்கை.. வருத்தத்தில் இருக்கும் சித்தி.. இப்படி ஓபனா போட்டு உடைச்சிட்டாங்களே

எதிர்பார்க்கவில்லை நான்: நானும் இதை எதிர்பார்க்கவில்லை. இன்று மாலை ஆறு மணிக்குள் அனைத்து பிரச்னைகளும் முடிந்து படம் வெளியாகும் என நம்புகிறேன். மே 14ஆம் தேதி படம் ரிலீஸாகி ப்ளாக் பஸ்டர் ஆகும் என நிறைய நாட்கள் நினைத்திருக்கிரேன். அழுகை வருகிறது. அது வலி வேறு டிப்பார்ட்மென்ட். சூயாவும் கடுமையாக உழைத்து கொடுத்திருக்கிறார். தாமதத்துக்கு மன்னியுங்கள். இந்த கஷ்டங்களை தீர்க்கும்படி கருப்பு படம் இருக்கும். கருப்பு வரான் வழி விடு என சொல்வேன். இப்போது பலர் வழியை மறைக்கிறார்கள்" என கண்கள் கலங்கியபடி தெரிவித்திருந்தார்.

இன்று ரிலீஸ்: இந்நிலையில் அனைத்து பிரச்னைகளையும் முடிந்துவிட்டதால் இன்று படமானது ரிலீஸாகியிருக்கிறது. 9 மணி காட்சிக்கு சென்ற ரசிகர்கள் தங்களது பலத்த வரவேற்பை படத்துக்கு கொடுத்துவருகிறார்கள். ஆர்.ஜே.பாலாஜி, திரிஷா உள்ளிட்டோர் சென்னை ரோகிணி தியேட்டரில் படம் பார்த்தார்கள். தியேட்டருக்கு சிரித்த முகத்தோடு வந்த பாலாஜியை, கருப்பன் வருகிறார் என சொல்லி ரசிகர்கள் வரவேற்றார்கள். நேற்று அழுத பாலாஜி இன்று சிரித்துக்கொண்டே வந்தது அனைவரையும் கவர்ந்திருக்கிறது. மேலும், ரசிகர்கள் கொடுத்த வரவேற்பை பார்த்து உணர்ச்சிவசப்பட்ட பாலாஜி, தியேட்டரில் சந்தோஷத்தின் உச்சத்தில் கத்தினார். அவரை திரிஷா கட்டிப்பிடித்து வாழ்த்து சொன்னார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X