Karuppu First Review: கருப்பு முதல் விமர்சனம்.. சூர்யா - RJ பாலாஜி கூட்டணி ஒர்க் அவுட் ஆச்சா?

சென்னை: சூர்யா - த்ரிஷா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் கருப்பு. இயக்குநர் RJ பாலாஜி எழுதி இயக்கியது மட்டுமல்லாமல், படத்தில் நடிக்கவும் செய்துள்ளார். படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். சாய் அபயங்கர் முதன் முதலாக கமிட் ஆன படம் இதுதான். ஆனால் இதற்குப் பின்னர் இவர் கமிட் ஆன பல்டி, டியூட் போன்ற படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் மிகவும் பிரமாண்டமான முறையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, படத்தின் முதல் விமர்சனம் ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவி வருகிறது.

சூர்யா - RJ பாலாஜி பாலாஜி கூட்டணியில் உருவாகும் முதல் படம் இது. இந்த படத்தை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படம் வரும் மே மாதம் 14ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் படத்திற்கு மதுரையில் இசை வெளியீட்டு விழாவை நடத்தி உள்ளார்கள். படம் ரிலீஸ்க்கு இன்னும் மூன்று வாரங்கள் உள்ள நிலையில் முன்னதாகவே இசை வெளியீட்டு விழாவை படக்குழு நடத்தி உள்ளது.

Karuppu First Review Suriya RJ Balaji Combo Gets Positive Buzz Ahead of Release

முதல் விமர்சனம்: இப்படி இருக்கையில் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட படத்தின் எடிட்டர் கலை படம் குறித்து தனது விமர்சனத்தை தெரிவித்தார். அதாவது, " மக்களே படம் செம்ம மாஸாக வந்துள்ளது. படம் முழுவதும் செம்ம ஜாலியாகவும் அதே நேரத்தில் விஷுவல் ட்ரீட்டாகவும் இருக்கும். தியேட்டர்ல தரமான படமாக இருக்கப் போவுது. RJ பாலாஜி உடன் இணைந்து பணியாற்றியது ரொம்ப சந்தோஷம்.

தெம்பு: சூர்யா சாரின் ரசிகராக இருந்து கொண்டு, இந்த படத்தில் நான் வேலை செய்தது ரொம்ப சந்தோஷமா இருக்கு. என்னுடைய வாழ்க்கையிலேயே மிகவும் பெருமைக்குரிய தருணங்களில் இதுவும் ஒன்று. டிரைலர் சீக்கிரமே ரிலீஸ் ஆகப்போகிறது. மாஸாக ரெடி செய்து கொண்டு உள்ளோம்" என்று பேசி உள்ளார். இவரது இந்த பேச்சும் படத்தை முழுவதும் பார்த்துவிட்டு அவர் கூறுவதும் ரசிகர்களுக்கு புதுத் தெம்பைக் கொடுத்துள்ளது.

நம்பிக்கை: சூர்யா நடிப்பில் கடந்த 2025ஆம் ஆண்டு மே 1ஆம் தேதி வெளியான ரெட்ரோ படம் வெளியாகி சூர்யாவுக்கு ஒரு நல்ல கம்பேக் படமாக அமைந்தது. இந்நிலையில் கருப்பு படம் அதைவிட நல்ல அளவில் பாக்ஸ் ஆபீஸில் வசூலிக்கும் என்ற நம்பிக்கையில் படக்குழு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X