விஜய்சேதுபதி ஒரு ’கருப்பு கமல்’.. விக்ரம் பார்த்துட்டு இப்படியொரு டைட்டில் கொடுத்தது யாரு தெரியுமா?

சென்னை: விக்ரம் படத்தில் தெறி மாஸ் ஓப்பனிங் காட்சியில் இருந்து கமலுடன் வெறித்தனமாக சண்டை போடும் காட்சி என அனைத்திலுமே நடிப்பு ராட்சசனாக மிரட்டியுள்ள விஜய்சேதுபதிக்கு புதிய பட்டம் ஒன்று கிடைத்துள்ளது.

Recommended Video

Vikram Public Review | Kamal Haasan | VijaySethupathi | Lokesh Kanagaraj | #vikramfdfs

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி உள்ள விக்ரம் படத்தை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

என்னடா அப்படியே கைதி படம் மாதிரியே இருக்கு என சிலர் கலாய்த்தும் கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர்.

நடிப்பு ராட்சசன்

நடிப்பு ராட்சசன்

விஜய்சேதுபதி ஹீரோவாக நடிக்கும் போது சாதுவாகவும், வில்லனாக நடிக்கும் போது நடிப்பு ராட்சசனாகவும் எப்படி மாறுகிறார் என்பது இன்னமும் புரியாத புதிராகவே உள்ளது. விக்ரம் வேதா, மாஸ்டர் படங்களை தொடர்ந்து விக்ரம் படத்திலும் தனது வெறித்தனமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். சந்தனம் எனும் கதாபாத்திரத்தில் கஞ்சா வியாபாரியாக நடித்துள்ளார் விஜய்சேதுபதி.

சத்யராஜ் மாதிரி கண்ணாடி

சத்யராஜ் மாதிரி கண்ணாடி

பழைய விக்ரம் படத்தில் சத்யராஜ் அணிந்திருக்கும் வித்தியாசமான மூக்குக் கண்ணாடியை இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு மாட்டி வில்லன் டச்சையும் கமல் படத்தில் இருந்தே இன்ஸ்பயர் ஆகி எடுத்திருக்கிறேன் என்பதை அழுத்தம் திருத்தமாகவே சொல்லி உள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். மேலும், விஜய்சேதுபதிக்கு எப்படி நடிப்புத் தீனி போட வேண்டும் என்பதை நன்கு புரிந்து வைத்துள்ளார் லோகேஷ் கனகராஜ். கூடிய சீக்கிரமே விஜய்சேதுபதியை ஹீரோவாக வைத்து ஒரு படம் பண்ணுங்க பாஸ் என அவரது ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

கருப்பு கமல்

கருப்பு கமல்

மக்கள் செல்வன் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் விஜய்சேதுபதி சமீபத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் மூலம் சிறப்பான வெற்றியை தமிழ் சினிமாவுக்கு கொடுத்திருந்தார். இந்நிலையில், அவருக்கு கருப்பு கமல் என்கிற இன்னொரு சிறப்பு பட்டமும் பிரபலம் ஒருவரால் கொடுக்கப்பட்டுள்ளது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.

கூல் சுரேஷ் பாராட்டு

புதிய படங்களை முதல் நாள் முதல் ஷோவே பார்த்து விடும் கூல் சுரேஷ் என்ன விமர்சனம் சொல்லப் போகிறார் என்பதை பார்க்கவே இப்போதெல்லாம் ரசிகர்கள் அதிகமாகி விட்டனர். உலகம் முழுவதும் 25 நாடுகளில் கமலின் விக்ரம் படம் வெளியாகி இருக்கு என்றும், இப்படியொரு கமல் படத்தை இதுவரை பார்த்ததில்லை என்றும் பேசிய கூல் சுரேஷ், விஜய்சேதுபதியின் நடிப்பை பாராட்டி அவரை கருப்பு கமல் என கொண்டாடி இருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X