Karuppu: இந்தியில் இறங்கிய கருப்பு.. பாதியில் நிறுத்தம்.. தமிழ்நாட்டில் தான் ரிலீஸ் ஆகலையா?
சென்னை: நடிகர் சூர்யா, நடிகை த்ரிஷா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள படம் கருப்பு. படம் மே 14 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று படக்குழு அறிவித்தது. ஆனால் படம், படக்குழு அறிவித்தபடி, படம் ரிலீஸ் ஆகவில்லை. இதனால் ரசிகர்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர். முதல் நாள் முதல் காட்சிக்கு டிக்கெட் வாங்கியவர்கள் படத்தின் தயாரிப்பாளரை காட்டமாக விமர்சித்து வருகிறார்கள்.
இப்படி இருக்கையில் படம் தமிழ்நாட்டில் படம் வெளியாகவில்லை, மேலும் வெளிநாடுகளிலும் படம் வெளியாகவில்லை. இப்படி இருக்கையில் படம் வட மாநிலங்களில் சில தியேட்டர்களில் வெளியாகி உள்ளது. அதாவது, படம் திரையிடப்பட்டு, பாதியில் படம் நிறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. படத்தை ரிலீஸ் செய்வதில் ஏற்பட்ட பிரச்னைகள் இன்னும் முழுவதுமாக தீர்க்கப்படாத காரணத்தால் தான் படம் வெளியாகவில்லை என்றும், படத்தை எப்படியாவது, இன்றோ அல்லது நாளையோ வெளியிட தயாரிப்பாளரும் படக்குழுவினரும் போராடி வருவதாகவும் பேச்சுக்கள் அடிபடுகிறது.

கருப்பு: இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி எழுதி, இயக்கி, நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் கருப்பு. படத்தில் சூர்யா, த்ரிஷா கதாநாயகன் மற்றும் கதாநாயகியாக நடித்துள்ளனர். படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். படக்குழு சொன்னது போல படம் வெளியாகாததால், ரசிகர்கள் கடும் மன உளைச்சலில் உள்ளனர். இது மட்டும் இல்லாமல், படத்தின் தயாரிப்பாளர் முறையான காரணத்தை தெரிவிக்காததால் ரசிகர்கள் மிகவும் காட்டமாக விமர்சித்து வருகின்றனர்.
ரசிகர்கள் குமுறல்: அதுவும் ரசிகர்களின் உணர்வுகளில் விளையாட வேண்டாம், முன்கூட்டியே சொல்லி இருந்தால் நாங்களும் அதற்கு ஏற்ற வகையில் இருந்திருப்போம். அப்படி இருக்கும்போது நீங்கள் ஏன் இவ்வாறு செய்கிறீர்கள். சூர்யா முதலில் தனது உறவினர்களுக்கு படம் பண்ணுவதை நிறுத்த வேண்டும், மற்ற தயாரிப்பாளர்களுக்கு படம் செய்தால், படமும் சொன்ன தேதியில் வெளியாகும், நல்லபடியாக படமும் ஓடும் என்றும் தெரிவித்து வருகிறார்கள். ஒரு ரசிகர் இணையத்தில் மனக்குமுறலை மிகவும் காட்டமாக விமர்சித்து வருகிறார்கள். படத்தின் ரிலீஸ் தேதி குறித்து படக்குழு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.


Click it and Unblock the Notifications