கருப்பு கதை இதுதானா?.. ஆர்ஜே பாலாஜியை நினைச்சாத்தான் பயமா இருக்கு.. சூர்யா ரசிகர்கள் புலம்பல்!

சென்னை: ஒரே ஒரு போலி சாமியாரை எதிர்க்க மூக்குத்தி அம்மன் சாதாரன மனுஷனை வைத்து நடத்தும் திருவிளையாடலாக மூக்குத்தி அம்மன் படத்தை எடுத்து அசத்தியிருந்தார் ஆர்.ஜே. பாலாஜி. அமீர்கானின் பிகே படத்தின் பாதிப்பு இருந்ததை அவரே தெளிவாகவும் கூறியிருந்தார். அதே போன்ற டிராக்கில் தான் மோசமான ஒரு வக்கீலை எதிர்க்க கருப்ப சாமியே கோட் சூட் போட்டு வக்கீலாக மாறி வாதாடி வெல்லப் போகும் கதையை உருவாக்கியுள்ளார் என டிரைலர் மூலம் புரிந்துக் கொள்ள முடிகிறது.

இந்திய சினிமாவில் சமீப காலமாக கடவுள் படங்களும் ஃபேண்டஸி கதைகளும் அதிகம் வெளியாகி வெற்றியடைந்து வருகின்றன. இந்நிலையில், தமிழ் சினிமாவிலும் கடவுளை மையமாக வைத்து இந்த படத்தை உருவாக்கியுள்ளனர்.

Karuppu Story fully revealed in Trailer and now fans have little fear about RJ Balaji Villain Role
Photo Credit:

காந்தாரா படத்தில் குல தெய்வ வழிபாடு மிகப்பெரிய தாக்கத்தைக் கொடுத்த நிலையில் தமிழ்நாட்டின் கிராமப்புரங்களில் அதிக மக்களால் கொண்டாடப்படும் குல தெய்வமான கருப்பசாமியை கதையின் நாயகனாக மாற்றி ஆர்ஜே பாலாஜி கருப்பு படத்தை உருவாக்கி உள்ளார்.

கருப்பு கதை: புத்திசாலியான வில்லன் வழக்கறிஞராக ஆர்ஜே பாலாஜி இருக்க ஒரு வழக்கில் அவரை எதிர்த்து வாதாட அந்த ஊரில் யாருமே வராத நிலையில், கருப்பு சாமியே கருப்பு கோட் மாட்டிக் கொண்டு வாதாட களத்தில் குதித்து நீதியை நிலைநாட்டும் வகையில் டிவைன் மற்றும் ஃபேண்டஸி கதையை படமாக உருவாக்கியுள்ளார் ஆர்ஜே பாலாஜி. கண்டிப்பாக இந்த கதை மக்கள் மத்தியில் க்ளிக் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆர்ஜே பாலாஜியை நினைச்சாத்தான் பயம்: நேற்று வெளியான கருப்பு டிரைலர் அதிரடியாக 9 மில்லியன் பார்வைகளை கடந்து டிரெண்டாகி வருகிறது. சூர்யா ரசிகர்களுக்கு கண்டிப்பா இந்த படம் கிடா விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் இயக்குநரும் படத்தின் மெயின் வில்லனுமான ஆர்ஜே பாலாஜியின் கதாபாத்திரம் மட்டும் ரசிகர்களுக்கு பிடித்து விட்டால் கருப்பு பிளாக்பஸ்டர் ஆவதை யாராலும் தடுக்க முடியாது என்றும் அவரை நினைத்தால் தான் கொஞ்சம் பயமா இருக்கு என சூர்யா ரசிகர்களே புலம்ப ஆரம்பித்துள்ளனர். ஆனால், அதையும் தாண்டி கருப்பு கல்லா கட்டும் என நம்புவோம். இந்த முறை சூர்யாவுக்கு மெகா பிளாக்பஸ்டர் படமாக கருப்பு மாற வேண்டும். தமிழ் சினிமாவுக்கும் ஒரு பெரிய வெற்றி தேவைப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X