கருப்பு தியேட்டர் வாசலில் பிழியப்பட்ட வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர்.. சூர்யா ரசிகர் செம அட்டாக்

சென்னை: தமிழ்நாட்டில் சோஷியல் மீடியா மூலம் பிரபலமானவர்களில் ஒருவர் திவாகர். கஜினி படத்தில் தர்பூசணியை வைத்து சூர்யா செய்த க்யூட் ரியாக்ஷனை ரீ க்ரியேட் செய்கிறேன் என ஒரு வீடியோவை போட; அது ட்ரோலுக்காக பல லட்சம் வியூஸ்களை பெற்றது. அப்போதிருந்து தன்னை வாட்டர் மெலன் ஸ்டார் என்றே அழைத்துக்கொள்கிறார். இந்த பிரபல்யத்தை பயன்படுத்தி பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார். இந்நிலையில் கருப்பு படம் வெளியான தியேட்டரின் வெளியே சூர்யா ரசிகர் ஒருவர் வாட்டர் மெலன் ஸ்டாரை பிழிந்து எடுத்துவிட்டார்.

சோஷியல் மீடியா மூலம் பிரபலமாகி வாழ்க்கையில் செட்டில் ஆனவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அப்படி பிரபலமானவர்தான் வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர். அடிப்படையில் பிசியோதெரபிஸ்ட்டான அவர் ரீல்ஸ் செய்து வெளியிட; அவை அனைத்துமே ட்ரோல் செய்யப்படுவதற்காக பல லட்சம் பார்வைகளை பெற்றன. அதன் மூலம் இவருக்கு பிரபல்யம் கிடைக்க; அதை பயன்படுத்தி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றார். அதற்கு முன்னதாக ஒன்றிரண்டு நொடிகள் மட்டும் சில படங்களில் தலை காண்பித்தார்.

Karuppu Theatre Viral Video Suriya Fan Fires Back at Watermelon Star Diwakar
Photo Credit:

ஓவர் அட்ராசிட்டி: பிக்பாஸ் வீடு கண்டிப்பாக திவாகரை மாற்றும் என்றுதான் எல்லோருமே எதிர்பார்த்தார்கள். விஜய் சேதுபதியும்கூட அதைத்தான் விரும்பினார். ஆனால் அவரோ அந்த வீட்டுக்குள் இன்னும் ஓவராகவே அட்ராசிட்டி செய்தார். அவரது செயல்பாடுகளால் கானா வினோத் வைத்து செய்தார் என்றே சொல்ல வேண்டும். நிகழ்ச்சியிலிருந்து பாதியிலிருந்து எவிக்ட் ஆன அவர்; வெளியே வந்து பேட்டி கொடுக்கும்போது தனியார் யூடியூப் சேனலோடு மோதலில் ஈடுபட்டார்.

Also Read
எத்தனை கோடியானாலும் வேண்டாம்.. ரஜினி - கமல் இணையும் படத்தை ரிஜெக்ட் செய்த திரிஷா?.. காரணம் யார்?
எத்தனை கோடியானாலும் வேண்டாம்.. ரஜினி - கமல் இணையும் படத்தை ரிஜெக்ட் செய்த திரிஷா?.. காரணம் யார்?

அடுத்த பிரச்னை: அதற்கு பிறகு குக் வித் கோமாளி செட்டில் தன்னை புகழ், மா.கா.பா ஆனந்த், கானா வினோத் உள்ளிட்டோர் தாக்கிவிட்டதாக காவல் நிலையத்தில் புகாரும் கொடுத்தார். இந்த விஷயத்தில் முதலில் அமைதியாக இருந்த புகழ், ஆனந்த் உள்ளிட்டோர்; தங்கள் தரப்பு விளக்கத்தை கொடுத்தார்கள். அப்போதுதான் தெரிந்தது வழக்கம்போல் இந்த விஷயத்திலும் திவாகர் மீதுதான் தவறு இருக்கிறது என்று. அதனை அறந்தாங்கி நிஷாவும் உறுதிப்படுத்தியிருந்தார். இனிமேலாவது அவரை யாரும் கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டும் என்ற கோரிக்கைகளையும் பலர் வைத்துவருகிறார்கள்.

பிழிந்துவிட்ட சூர்யா ரசிகர்: இந்நிலையில் நேற்று கருப்பு திரைப்படம் வெளியானது. அந்தப் படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருக்கிறார் திவாகர். நேற்று தியேட்டரில் படம் பார்த்துவிட்டு யூடியூப் சேனல் ஒன்றிடம் பேசினார். அப்போது அவர், 'தர்பூசணி பழத்தை வைத்து முதன்முதலில் நான்தான் நடித்தேன்' என சொன்னதாக தெரிகிறது. இதை கேட்ட அருகில் இருந்த சூர்யா ரசிகர் ஒருவர் உடனே மைக்கை வாங்கி திவாகரிடம், 'வாட்டர் மெலன் சீன் உங்களுடையது இல்லை. அதை சூர்யாதான் முதன்முதலில் செய்தார்.

ரொம்ப தப்பு: ஆனால் அது உங்களுடையது என சொல்கிறீர்கள். அது ரொம்ப தவறு. நீங்கள் அப்படி பேசியதை கேட்டுத்தான் இப்போது நான் இதனை சொல்கிறேன். நாம்தான் அவர்களை பார்த்து செய்ய முடியும். அவர்கள் எல்லாம் நம்மை பார்த்து செய்யமாட்டார்கள். இனிமேலாவது இதனை திருத்திக்கொள்ளுங்கள்" என ஒரே போடாக போட்டார். அதை கேட்ட திவாகரோ வழக்கம்போல் சின்ன குழந்தை போல் தலையாட்டிக்கொண்டு இருந்தார். இனிமேலாவது வாயை அடக்கிக்கொண்டு பிழைப்பை பார்ப்பாரா திவாகர்?.. பொறுத்திருந்து பார்ப்போம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X