கருப்பு டிரைலரில்.. சிவகார்த்திகேயனை ட்ரோல் செய்த RJ பாலாஜி.. ஒரு துப்பாக்கி எத்தனையைத்தான் தாங்குமோ

சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி கடைசியாக வெளியான படமான கோட் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்த போது அவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருந்தது. ஆனால் அதன் பின்னர் அதுவே சிவகார்த்திகேயனை பங்கமாக ட்ரோல் செய்வதற்கான ட்ரோல் மெட்டீரியலாக மாறிவிட்டது.

தற்போதை தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் நடிப்பில் கடந்த 2024ஆம் ஆண்டு வெளியான படம் கோட். இந்த படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். அதேபோல், படத்தின் கிளமாக்ஸில் நடிகர் சிவகார்த்திகேயன் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதில் சிவகார்த்திகேயன் கையில் துப்பாக்கியை கொடுத்து, துப்பாக்கியை பிடிங்க சிவா என்று கூறுவார் விஜய். இந்த காட்சி சிவகார்த்திகேயனின் திரை வாழ்க்கையில் மிகவும் முக்கியமான காட்சியாக பார்க்கப்பட்டது. விஜய் ரசிகர்களின் ஆதரவும் சிவகார்த்திகேயனுக்கு கணிசமாக கிடைத்தது.

Karuppu Trailer Dialogue Sparks Debate Fans Say RJ Balaji Took a Dig at Sivakarthikeyan

ஆனால் 2026 ஆம் ஆண்டு பொங்கலுக்கு விஜய்யின் ஜன நாயகன் படத்துடன் சிவகார்த்திகேயனின் பராசக்தி படமும் மோதுவதாக இருந்தது. ஆனால் வெளியீட்டுச் சான்றிதழ் வாங்காத காரணத்தால் ஜன நாயகன் இதுவரை ரிலீஸ் ஆகாமல் உள்ளது. இப்படி இருக்கையில் பராசக்தி படம் வெளியான காலகட்டத்தில் நடிகர் சிவகார்த்திகேயனை விஜய் ரசிகர்கள் மிகவும் மோசமாக விமர்சித்தனர். அதுவும் சிவகார்த்திகேயனின் குடும்பத்தினர் குறித்து மிகவும் தரக்குறைவாக இணையத்தில் விமர்சித்தனர். சிலர் கொ*லை மிரட்டல் விடுத்தனர்.

துப்பாக்கி: இப்படி இருக்கையில் விஜய் கையில் ஒரு துப்பாக்கியை வாங்கிய பின்னர் சிவகார்த்திகேயன் தொடர்ந்து சில பாசிட்டிவ் விமர்சனங்களையும் நெகட்டிவ் விமர்சனங்களையும் எதிர்கொண்டு வருகிறார். மதராஸி படத்தில் துப்பாக்கி யார் கையில் இருந்தாலும் வில்லன் நான் தான் என்று நடிகர் வித்யூத் ஜம்வால் டயலாக் கூறுவார். இவர்தான் துப்பாக்கி மற்றும் மதராஸி படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தவர்.

Karuppu Trailer Dialogue Sparks Debate Fans Say RJ Balaji Took a Dig at Sivakarthikeyan

ட்ரோல்: இப்படி இருக்கையில் வரும் 14ஆம் தேதி வெளியாகவுள்ள சூர்யாவின் கருப்பு படத்தின் டிரைலர் மே 10ஆம் தேதி வெளியானது. இந்த படத்தின் இயக்குநர் RJ பாலாஜி, இவர் சிவகார்த்திகேயனின் நண்பர்களில் ஒருவர். இப்படி இருக்கையில் இந்த படத்தின் டிரைலரில், குணச்சித்திர நடிகை தீபா சங்கர், RJ பாலாஜியை நோக்கி, தம்பி B.K கையில் துப்பாக்கி கிடைத்தால் யார் என்ன என்று பார்க்காமல் நீட்டிடுவியோ என்று கேட்கிறார்.

எதிர்ப்பு: இது நடிகர் சிவகார்த்திகேயனை ட்ரோல் செய்வது போலத்தான் இருக்கிறது என்று பலரும் கூறி வரும் நிலையில், சிவகார்த்திகேயன் ரசிகர்கள் டிரைலருக்கு நெகட்டிவ் விமர்சனங்களை வாரி வழங்கி வருகிறார்கள். அதே நேரத்தில் சிலரோ, நடிகர் சூர்யா மாதிரியான முன்னணி நடிகரின் படத்தில் இளம் நடிகரான சிவகார்த்திகேயனை ட்ரோல் செய்யும் டயலாக்குகள் இல்லாமல் இருந்திருக்க வேண்டும் என்றும் பேசி வருகிறார்கள். அதே நேரத்தில் சிலர் இதற்கு தேவையில்லாமல் உள்நோக்கம் கற்பிக்க வேண்டாம் என்றும் கூறி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X