Karuppu Trailer: கருப்பு டிரைலர்.. வந்திருக்கிறது கருப்புடா.. ரசிகர்களே தரமான சம்பவம் உறுதி போலயே!
சென்னை: இயக்குநர் RJ பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா, த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்து உருவாகி உள்ள படம் கருப்பு. படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். படம் வரும் 14ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள நிலையில், படத்தின் டிரைலரை அதிகாரப்பூர்வமாக படக்குழு வெளியிட்டுள்ளது. ஏற்கனவே படக்குழு தரப்பில் வெளியிடப்பட்ட சில கிலிம்ஸ் வீடியோக்களில் படம் கோர்ட் டிராமா மற்றும் நாட்டுப்புறவியல் கதைக்களத்தை கொண்ட படம் என்பது தெளிவாகத் தெரிந்தது.
கருப்பு என்ற எல்லைச் சாமி, கருப்பு நிற கோட் அணிந்து மக்களைக் காக்க வாதாடும் வக்கீல் என இதன் பொருத்தமும் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தது. டிரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ரிலீஸ் செய்கின்றனர். படத்தின் டிஸ்ட்ரிபூஷன் வேலைகள் எல்லாம் சிறப்பாக முடிந்திருந்தாலும், படத்தின் டிரைலரை ரிலீஸ் செய்ய தமிழ்நாடு அரசியல் சூழல் தீவிரமான பரபரப்பில் இருந்து, இயல்பு நிலைக்குத் திரும்ப படக்குழு காத்துக் கிடந்தது.

அதன்படி ஒரு வழியாக தவெக தலைவர் விஜய் தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில் கருப்பு படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. டீசர் சூர்யா ரசிகர்கள் மட்டும் இல்லாமல், திரைப்பட ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. டிரைலர் சூர்யா ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் பக்கா மசாலா டிரைலராக வெளியாகி உள்ளது. சூர்யாவின் முந்தைய மாஸ் ஹிட் படங்களில் அவருக்கு இருந்த பல ஸ்பெஷாலான ஸ்டைலான மேனரிசங்களை படம் முழுக்க பார்த்து பார்த்து இறக்கி உள்ளார் இயக்குநர்.
த்ரிஷாவுக்கு பாடகி சின்மயி குரல் கொடுத்துள்ளார் என்பதால், நீண்ட இடைவெளிக்குப் பிறகு அது கவனம் பெற்றுள்ளது. மேலும் ரசிகர்கள் சிலர் இதை நன்றாக இருக்கிறது என்றும், சிலர் மேட்ச் ஆகவில்லை என்றும் கூறி வருகிறார்கள். படத்தின் டிக்கெட் முன்பதிவு மே 10ஆம் தேதியில் இருந்து தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. வெளிநாடுகளிலும் படத்திற்கான புக்கிங் சிறப்பாக தொடங்கிவிட்டது என்று படக்குழு தெரிவித்துள்ளது. மொத்ததில் படத்தின் ரிலீஸ் பணிகள் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.


Click it and Unblock the Notifications