கருப்பு படத்துக்கு வந்த பிரச்னை.. அழுத ஆர்.ஜே.பாலாஜி.. ஓடோடி வந்து ஆறுதல் சொன்ன இயக்குநர்

சென்னை: நடிகர் சூர்யா இப்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கருப்பு படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக திரிஷா நடித்திருக்கிறார். சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார். கடந்த சில வருடங்களாகவே சூர்யாவின் எந்தப் படமும் அவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை. எனவே இந்தப் படமாவது வெற்றியை கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்திருந்தது. இன்று ரிலீஸாகியிருக்க வேண்டிய படம் சில பிரச்னைகளால் வெளியாகவில்லை.

சூர்யா நடிப்பில் கடைசியாக ரெட்ரோ, கங்குவா ஆகிய இரண்டு படங்கள் வந்தன. கங்குவா படத்தை சிறுத்தை சிவா பிரமாண்ட பட்ஜெட்டில் இயக்கியிருந்தார். இந்திய அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றுதான் படத்தின் ப்ரோமோஷன்களில் எல்லாம் சூர்யா உள்ளிட்டோர் பேசினார்கள். ஆனால் பற்ற வைத்த எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி படம் இல்லை. படத்தை அனைவருமே கழுவி கழுவி ஊற்றினார்கள். இதனால் ரொம்பவே அப்செட் ஆனார்கள் சூர்யாவின் ரசிகர்கள். அதனையடுத்து வந்த ரெட்ரோவும் சுத்தமாக காலியானது.

Karuppu Will Win Big Rathna Kumar s Emotional Message to RJ Balaji Trends Online
Photo Credit:

ஆர்.ஜே.பாலாஜியுடன் கருப்பு: இப்படிப்பட்ட சூழலில்தான் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் கருப்பு படத்தில் நடித்திருக்கிறார் சூர்யா. இதில் அவருக்கு ஜோடியாக திரிஷா நடித்திருக்கிறார். எல்கேஜி, மூக்குத்தி அம்மன் ஆகிய படங்களை இயக்கி இயக்குநராக ஆர்.ஜே.பாலாஜி வெற்றி பெற்றிருக்கிறார். எனவே சூர்யா நீண்ட காலமாக தேடி வரும் ஒரு வெற்றியை கருப்பு படத்தின் மூலமாவது பாலாஜி கொடுப்பாரா என்றும் ஆவல் சூர்யா ரசிகர்களிடம் ஆவல் எழுந்திருந்தது. கண்டிப்பாக இது சூர்யாவுக்கு மறக்க முடியாத படமாக இருக்கும் என்பது இயக்குநரின் நம்பிக்கை.

Also Read
அஜித்தை கிண்டல் செய்த விஜய் ரசிகர்கள்.. ஏகே கொடுத்த செம ரிப்ளை.. நெத்தியடி பதிலா இருக்கே
அஜித்தை கிண்டல் செய்த விஜய் ரசிகர்கள்.. ஏகே கொடுத்த செம ரிப்ளை.. நெத்தியடி பதிலா இருக்கே

ரிலீஸில் பிரச்னை: இன்று படமானது ரிலீஸாகவிருக்கிறது. ஆனால் தயாரிப்பு தரப்புக்கு ஏற்பட்ட திடீர் நிதி சிக்கலால் படம் ரிலீஸாகவில்லை. இதனையடுத்து ஒரு வீடியோவை வெளியிட்ட ஆர்.ஜே.பாலாஜி, "அனைவருக்கும் வணக்கம். காரில் இருந்து இன்னொரு அப்டேட். இதுவே கடைசியாக இருக்கும் என நம்புகிறேன். அனைத்து ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இப்படி நடந்திருக்கக்கூடாது. படம் பார்ப்பதற்காக நீண்ட தூரம் பயணம் செய்து காலை ஒன்பது மணிக்கே தியேட்டருக்கு சென்ற அனைவரிடமும் மன்னிப்பு கெட்கிறேன்.

எதிர்பார்க்கவில்லை: நானும் இதை எதிர்பார்க்கவில்லை. இன்று மாலை ஆறு மணிக்குள் அனைத்து பிரச்னைகளும் முடிந்து படம் வெளியாகும் என நம்புகிறேன். மே 14ஆம் தேதி படம் ரிலீஸாகி ப்ளாக் பஸ்டர் ஆகும் என நிறைய நாட்கள் நினைத்திருக்கிரேன். அழுகை வருகிறது. அது வலி வேறு டிப்பார்ட்மென்ட். சூயாவும் கடுமையாக உழைத்து கொடுத்திருக்கிறார். தாமதத்துக்கு மன்னியுங்கள். இந்த கஷ்டங்களை தீர்க்கும்படி கருப்பு படம் இருக்கும். கருப்பு வரான் வழி விடு என சொல்வேன். இப்போது பலர் வழியை மறைக்கிறார்கள்" என கண்கள் கலங்கியபடி தெரிவித்திருந்தார்.

ஆறுதல் சொன்ன இயக்குநர்: ஆர்.ஜே.பாலாஜியின் இந்த வீடியோ அனைவரையும் உருக வைத்திருக்கிறது. இந்த வீடியோவை ஷேர் செய்திருக்கும் மேயாத மான், 29 உள்ளிட்ட படங்களின் இயக்குநர் ரத்னகுமார் தனது எக்ஸ் பக்கத்தில், "உங்களை இப்படி உடைந்து போய் பார்த்ததில்லை. தைரியமாக இருங்கள் ஆர்.ஜே.பாலாஜி ப்ரதர். கருப்பு திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று இதில் தொடர்புடையவர்களின் வாழ்க்கையையே மாற்றும். கடின உழைப்பும், ஆர்வமும் ஒருபோதும் தோற்காது. உங்களுக்கு முழு ஆதரவு கொடுக்கிறேன்" என குறிப்பிட்டிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X