கரூர் சம்பவம், சங்கீதா விவாகரத்து, ஜன நாயகன் லீக்.. விஜய்க்கு மக்கள் ஆதரவு தெரிவிக்க இவைதான் காரணமா?
சென்னை: இது 5 வருடம் நடைபெறும் தேர்தல் அல்ல 50 வருடத்துக்கு ஒரு முறை நடைபெறும் அரசியல் தேர்தல் என்றும் நான் வரேன் தனியா உங்க விஜய் என தொடர்ந்து கர்ஜித்து வந்த விஜய்க்கு மக்கள் சப்போர்ட் அதிகரித்துள்ளது.
200 + இடங்களை வெல்வோம் என ஃபினிஷ் செய்கை எல்லாம் காட்டிய மு.க. ஸ்டாலினின் திமுக மூன்றாவது இடத்துக்குச் சென்றது தான் பலராலும் ஜீரணிக்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. அதிமுக 2வது இடத்தில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.

விஜய்க்கு மக்கள் ஆதரவு இந்தளவுக்கு கிடைக்க காரணமே கரூர் சம்பவம், சங்கீதா விவாகரத்து மேட்டரை லீக் செய்தது மற்றும் ஜன நாயகன் படம் லீக் ஆனது தான் என்கின்றனர்.
விஜய்க்கே இப்படின்னா: 500 கோடி சொத்து உள்ளதாக ஆவணத்தில் எந்தவித அச்சமும் இன்றி காட்டும் விஜய்க்கே இந்தளவுக்கு மோசமான அரசியல் அழுத்தங்களை கொடுத்து அவரை காலி பண்ண நினைக்கிறார்களே என்கிற அனுதாப அலை தான் தமிழ்நாட்டில் வீசி உள்ளதா என்கிற கேள்வி எழுந்துள்ளது. மேலும், ஒவ்வொரு வீட்டிலும் குழந்தைகளும் பெண்களும் நடத்திய விசில் புரட்சி தான் இப்படியொரு வாக்கு சதவீதத்தை விஜய் வெல்ல காரணம் என்கின்றனர்.
கரூர் சம்பவம்: தமிழ்நாட்டில் பல இடங்களில் விஜய் பிரச்சாரம் மேற்கொண்ட போதெல்லாம் இப்படி மோசமான சூழல் நிகழவில்லையே. கருரில் மட்டும் அப்பாவி பொதுமக்கள் 41 பேர் பலியாக என்ன காரணம். விஜய் மீதுள்ள வெறுப்பு காரணமாக திமுக அரசு வேண்டுமென்றே போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்தாமல் மக்கள் பலியாக காரணம் ஆகிவிட்டனர் என்கிற எதிர்ப்பு அலை தான் திமுக பெரும் பின்னடைவை சந்திக்க காரணம் என்கின்றனர்.
சங்கீதா விவாகரத்து: விஜய் மற்றும் சங்கீதா இருவரும் பொதுவெளியில் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டுக்குப் பிறகு பெரிதாக தென்படவில்லை. விஜய் அரசியல் கட்சி தொடங்கியதில் இருந்தே அவர்கள் யாரும் சப்போர்ட் செய்யவில்லை. ஆனால், சரியாக தேர்தல் நேரத்தில் விஜய் - சங்கீதா விவாகரத்து பஞ்சாயத்தை வேண்டுமென்றே லீக் செய்து விஜய்யை அட்டாக் செய்தனர். அதன் காரணமாகத்தான் விஜய்க்கு மக்கள் சப்போர்ட் மேலும், அதிகரித்தது என்கின்றனர்.
ஜனநாயகன் லீக்: விஜய் படங்கள் வெளியானாலே முதல் நாளில் 100 கோடிக்கு மேல் வசூல் வந்துவிடும். அந்தளவுக்கு மக்கள் ஆவலாக படத்தை எதிர்பார்த்த நிலையில், ஜனவரி 9ம் தேதி வெளியாக வேண்டிய படத்தை தடுத்தனர். திமுகவின் ஆதரவு படமான பராசக்தி எந்த தடையுமின்றி வெளியானது. ஆனால், அது ஓடவில்லை. அதைவிட மோசமானதாக 500 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் அளவுக்கு விஜய்யின் ஜன நாயகன் படம் லீக் ஆனது பெரும் சர்ச்சையை கிளப்பியது. விஜய்க்கு இன்னும் எவ்வளவு தான் தொல்லை கொடுப்பார்கள் என நினைத்து விஜய்க்கு ஒரு வாய்ப்பை தமிழ்நாட்டு மக்கள் கொடுத்துள்ளனர். அதை சரியாக பயன்படுத்தினால் மட்டுமே மக்களின் ஆதரவு தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications