சிவா ஆடல.. அப்போ வேற யாரு.. - 'கருத்தவன்லாம் கலீஜாம்' பாடல் வீடியோ!
சென்னை : இயக்குனர் மோகன் ராஜாவின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் 'வேலைக்காரன்' திரைப்படத்தில் அனிருத் இசையில் உருவாகி சமீபத்தில் வெளியான 'கருத்தவன்லாம் கலீஜாம்' பாடல் பெரிய ஹிட் ஆகியுள்ளது.
இந்தப் பாடல் வரிகள் முழுக்கவே உழைக்கும் வர்க்கத்தைப் பற்றியும், கீழ்த்தட்டு மக்களைப் பற்றியும், சென்னையிலுள்ள குப்பங்களில் வசிப்பவர்களை பற்றியும் பேசப்பட்டுள்ளது.

காலம் காலமாக அவர்கள் மீது மேல்தட்டு வர்க்கம் வைக்கும் பொதுவான 'ஸ்டீரியோ-டைப்' குற்றச்சாட்டுகளை எல்லாம், பொய் என உரக்கச் சொல்கிறது இப்பாடல். ரொம்ப சீரியஸாக இல்லாமல் ஜாலியாக அனிருத்தின் peppy இசையில் பாடல் இருப்பதால் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.
இந்தப் பாடலுக்கு இளைஞர்கள் சிலர் கவர் வீடியோ ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள். சென்னையின் குப்பத்துப் பகுதிகளில் காட்சியமைத்து சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த வீடியோ யூ-ட்யூப் பார்வையாளர்களைக் கவர்ந்து வருகிறது.



Click it and Unblock the Notifications