Karwa Chauth 2024: கணவருக்காக கடுமையான விரதம் இருந்த நடிகைகள்.. கர்வா சௌத் பூஜை!

மும்பை: கர்வா சௌத் என்பது வடமாநிலத்தில் உள்ள இந்து பெண்கள் கொண்டாடும் ஒரு முக்கியமான பண்டிகையாகும். இந்த கர்வா சௌத் பண்டிகைக்கு பௌர்ணமிக்குப் பிறகு நான்காவது நாளில் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை இன்று வடமாநிலத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

இந்த நாளில், திருமணமான பெண்கள் தங்கள் கணவரின் நீண்ட ஆயுளுக்காகவும், உடல் ஆயோகியத்திற்காகவும் செல்வ செழிப்புடன் வாழ்வதற்காக, சூரிய உதயம் முதல் சந்திர உதயம் வரை தண்ணீர் கூட குடிக்காமல் விரதம் இருந்து, பாரம்பரிய இந்திய ஆடைகளை உடுத்தி, மெஹந்தியால் தங்கள் கைகளை அலங்கரித்து, சந்திரனுக்கு விலக்கு ஏற்றி பூஜை செய்து, அந்த வட்டவடிவமான தட்டில் நிலவை பார்த்துவிட்டு, அதே நாட்டில் கணவனின் முகத்தை பார்த்து விரதத்தை முடிப்பார்கள்.

karwa chauth 2024 bollywood 2024

ஹன்சிகா மோத்வானி: மும்பை , டெல்லி, பஞ்சாப், அரியான என வடமாநிலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற இந்த நாளை பல திரை நட்சத்திரங்களும் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் நடிகை ஹன்சிகா மோத்வானி இன்று காலையில் இருந்து விரதம் இருந்து இந்த கர்வா சௌத் பூஜையை செய்தார். அந்த போட்டோவை இணையத்தில் பகிர்ந்து பலருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சோனாக்ஷி சின்ஹா: அண்மையில் திருமணமான இளம் தம்பதிகளான சோனாக்ஷி சின்ஹா ​​மற்றும் ஜாகீர் இக்பால் இன்று முதல் கர்வா சௌத் பூஜையை கொண்டாடி உள்ளனர். இருவரும் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டு, தங்களது ரசிகர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

karwa chauth 2024 bollywood 2024

பாலிவுட்டின் நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மகளான இவர் தமிழிலும் லிங்கா படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு தெரிந்த முகமாக மாறினார். ஏழு ஆண்டுகளாக ஜாகீர் இக்பாலும் சோனாக்ஷியும் காதலித்து வந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தற்போது இவர் முதல் கர்வா சௌத் பூஜையை கொண்டாடி உள்ளனர்.

புனிதமான நாள்: சனிதா கபூரின் வீட்டில் நடந்த கர்வா சவுத் பூஜையில் ஷில்பா ஷெட்டி தனது கணவர் குந்த்ராவுடன் கலந்து கொண்டார். மிகவும் புனிதமான இந்த பூஜைக்காக அதிகாலையில் இருந்து மாலை சந்திர உதயம் வரை, தண்ணீர் கூட குடிக்காமல் இந்த விரதத்தை ஷில்பா ஷெட்டி முடித்தார். பல ரசிகர்களுக்கும் அவர் கர்வா சவுத் பூஜைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

karwa chauth 2024 bollywood 2024

சோனம் கபீர்: சோனம் கபூரின் கர்வா சௌத் பூஜைக்காக அனைவரையும் மயக்கும் வகையில் ஆடையை அணிந்து கொண்டு இந்த நாளில் விரதம் இருந்தார். மேலும், அனுஷ்கா சர்மா, கத்ரினா கைஃப், ப்ரீதி சோப்ரா, பாவ்னா பாண்டே, மகிப் கபூர், ரவீனா டான்டன், ரகுல் ப்ரீத் சிங் என ஒட்டு மொத்த நட்சத்திரங்களும் இன்று கர்வா சௌத் பூஜையை விரதம் இருந்து மேற்கொண்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X