கசட தபற... வாரே வா...படத்துக்கு இப்படி எல்லாம் தலைப்பு வச்சா தமிழை அசைச்சுக்க முடியாது!

சென்னை: இயக்குநர் சிம்புதேவன் இயக்கும் படத்துக்கு கசட தபற என்று பெயர் வைத்து இருப்பது பலருக்கும் மகிழ்ச்சியை தந்திருக்கிறது.

இப்படியே போனால் இனி தமிழ் எழுத்துக்களில் வல்லினம் மெல்லினம் இடையினம் என்கிற எழுத்துக்கள் குறித்த சந்தேகம் நம் பிள்ளைகளுக்கு இருக்காது.

Kasada thapara waht a Tamil tittle!

கசட தபற ஆறு எழுத்து.. கதைக் களமும் ஆறு..ஆனால் ஒன்றுக்கு ஒன்று கதை தொடர்புடையதா இருக்குமாம்.

இயக்குநர் மட்டும்தான் ஒருவராவார் சிம்புதேவன்...மற்றபடி ஆறு யூனிட்டுக்கும் ஆறு டெக்னீஷியன்ஸ். இசை அமைப்பாளர்கள், கேமிரா மேன்கள், எடிட்டர்கள் என்று அசத்தும்படி கதைக்களம் இருக்குமாம்.

யுவன், பிரேம்ஜி,சந்தோஷ் நாராயண்,ஜிப்ரான் என்று இசை அமைப்பாளர்கள் ஆறு பேர். குழப்பம் இல்லாமல் ஒரு யூனிட் ஐந்து நாள் ஷூட்டிங் என்று திட்டமிட்டு 30 நாட்களில் படத்தை முடித்து கொடுக்க உழைத்து வருகிறாராம் சிம்பு தேவன்.

நடிகர்கள் சிவா,ஜெய், வைபவ்,பிரேம்ஜி,சந்தீப், கிஷன் என்று உறுதியாகி உள்ளது. தயாரிப்பாளர் வெங்கட் பிரபுவாச்சே...

ஆமா,வெங்கட் பிரபுவின் ஆர்.கே.நகர் படத்தின் பிரச்சனை இன்னுமா முடிவுக்கு வரவில்லை?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X