வெங்கட் பிரபு தயாரிக்கும் "கசட தபற" OTT ரிலீசா!?
சென்னை: பிளாக் டிக்கட் கம்பெனி சார்பில் இயக்குனர் வெங்கட் பிரபு ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரனுடன் இணைந்து தயாரித்துள்ள படம் கசட தபற.
6 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தை பிரபல இயக்குனர் சிம்பு தேவன் இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் முன்னணி நடிகர்கள், நடிகைகள் கூட்டணி இணைந்து நடித்துள்ளது எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.

நட்சத்திர கூட்டணி
6 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்த படத்தில் நாயகர்களாக ஹரீஷ் கல்யாண், சுந்தீப் கிஷன், ஜெய், மிர்ச்சி சிவா, சாந்தனு, வெங்கட் பிரபு, பிரேம்ஜி அமரன், கலையரசன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த நட்சத்திர கூட்டணி படத்திற்கு வலு சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

6 இசையமைப்பாளர்கள்
இந்த படத்தில் நாயகிகளாக ப்ரியா பவானி ஷங்கர், ரெஜினா கேஸண்ட்ரா, விஜயலட்சுமி , ஜனனி ஆகியோர் நடித்துள்ளனர். 6 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன், ஜிப்ரான், சாம் சிஎஸ், பிரேம்ஜி மற்றும் ஷான் ரோல்டன் ஆகியோர் இசையமைத்துள்ளனர்.

நல்ல வரவேற்பு
6 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ள ஒரு கதை, முன்னணி நட்சத்திரங்கள், 6 இசையமைப்பாளர்கள் என இந்த படம் ரசிகர்கள் இடையே ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக வெளியான இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

பரவி வரும் தகவல்
இந்நிலையில் கசட தபற திரையரங்குகளில் இல்லாமல் நேரடியாக OTT யில் வெளிவரவுள்ளது எனவும், Sony Liv OTT தளம் இந்த படத்தினை வாங்கியுள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











