காசேதான் கடவுளடா படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது
சென்னை : கடந்த 1972ல் வெளியாகி சிறப்பான நகைச்சுவை படம் என பெயர் பெற்ற படம் காசேதான் கடவுளடா.
இந்தப் படத்தின் ரீமேக்கை தற்போது ஆர் கண்ணன் இயக்கி வருகிறார்.
நடிகர்கள் சிவா, கருணாகரன், யோகிபாபு, பிரியா ஆனந்த் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகி வருகிறது காசேதான் கடவுளடா.

காசேதான் கடவுளடா படம்
கடந்த 1972ல் முத்துராமன், தேங்காய் ஸ்ரீநிவாசன், ஸ்ரீகாந்த், மனோரமா, லஷ்மி உள்ளிட்டவர்களின் நடிப்பில் வெளியான நகைச்சுவைப் படம் காசேதான் கடவுளடா. சித்ராலயா கோபு இயக்கத்தில் வெளியான இந்தப் படம் நகைச்சுவை படங்களின் வரிசையில் முக்கிய படமாக உள்ளது.

ஆர் கண்ணன் இயக்கம்
இந்தப் படம் தற்போது நடிகர்கள் சிவா, கருணாகரன், யோகிபாபு மற்றும் பிரியா ஆனந்த் ஆகியோர் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. ஆர் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் குக் வித் கோமாளி புகழ், சிவாங்கி, மனோபாலா உள்ளிட்டவர்களும் நடித்துள்ளனர்.

பர்ஸ்ட் லுக் போஸ்டர்
குறுகிய காலத்திலேயே இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளது. இதற்கு தன்னுடைய படக்குழுவினரே காரணம் என்று ஆர் கண்ணன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இல்ர முத்துராமன் வேடத்தில் சிவாவும் தேங்காய் ஸ்ரீநிவாசன் வேடத்தில் யோகிபாபுவும் நடித்துள்ளது தெரிகிறது.

அகில உலக சூப்பர்ஸ்டார் சிவா
சிறப்பான நகைச்சுவை படமாக போற்றப்படும் காசேதான் கடவுளடா படத்தை துணிச்சலாக ரீமேக் செய்துள்ளார் ஆர் கண்ணன். அகில உலக சூப்பர்ஸ்டார் சிவா இந்தப் படத்தில் லீட் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில் ரசிகர்களுக்கு சிறப்பான அனுபவத்தை இந்தப் படம் தரும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











