மிர்ச்சி சிவா… யோகி பாபு கூட்டணியில் ரீமேக் ஆகிறது காசேதான் கடவுளடா!

சென்னை : காசேதான் கடவுளடா திரைப்படத்தை இயக்குனர் ஆர் கண்ணன் ரீமேக் செய்ய உள்ளார்.

மிர்ச்சி சிவா, யோகி பாபு, ஊர்வசி ஆகியோர் லீட் ரோலில் நடிக்கின்றனர்.

தமிழ், மலையாளம்,தெலுங்கில் உள்ள நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

நகைச்சுவை

நகைச்சுவை

1972ம் ஆண்டு வெளியான நகைச்சுவைத் திரைப்படம் தான் காசேதான் கடவுளடா. இத்திரைப்படத்தில் லட்சுமி, மனோரமா, முத்துராமன், தேங்காய் சீனிவாசன், ஸ்ரீகாநத், வெண்ணிற ஆடை மூர்த்தி என பல நட்சத்திரங்கள் நடித்திருப்பார்கள்.

இசை

இசை

இப்படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்து இருந்தார். இப்படத்தில் இடம் பெற்ற அனைத்துப்பாடல்களும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றன. குறிப்பாக ஜம்புலிங்கமே ஜடாதரா என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் பேசப்பட்ட பாடலாக இருந்தது.

சிவா , யோகி பாபு

சிவா , யோகி பாபு

இந்நிலையில், காசேதான் கடவுளடா திரைப்படத்தை ரீமேக் செய்யும் முயற்சியை இயக்குனர் ஆர் கண்ணன் கையில் எடுத்துள்ளார். முத்துராமன் கதாபாத்திரத்தில் மிர்ச்சி சிவாவும், தேங்காய் சீனிவாசன் கதாபாத்திரத்தில் யோகி பாவும், மனோரமா கேரக்டரில் ஊர்வசியும் நடிக்கின்றனர்.

முடிவாகவில்லை

முடிவாகவில்லை

படக்குழு ஹீரோயினை தேர்வு செய்யும் பணியில் இறங்கி உள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் உள்ள நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஆனால் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. விரைவில் இப்படத்தின் மற்ற நடிகர் நடிகையர் விவரத்தை படக்குழு வெளியிடும்.

ரீமேக்

ரீமேக்

ரஜினிகாந்த் நடித்து வெற்றிப்பெற்ற தில்லு முல்லு ரீமேக்கில் மிர்ச்சி சிவா நடித்திருந்தார். இப்படத்தை பத்ரி இயக்கினார், எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைச்ச நியூ லுக்கிற்காக யுவன் படம் முழுக்க உடன் இருந்தார். இப்படத்தில் பிரகாஷ் ராஜ், கோவை சரளா, சூரி,சந்தானம் படம் முழுவதும் கலர் ஃபுல் கலக்கல் காமெடி இருந்தாலும் தில்லு முல்லு ரீமேக் திரைப்படம் எடுபடவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X