பிரபல நடிகையை அனுமதிக்க மறுத்த புகழ்பெற்ற மருத்துவமனைகள்.. விளாசித் தள்ளிய பிக்பாஸ் பிரபலம்!
மும்பை: பிரபல நடிகையை சில மருத்துவமனைகள் அனுமதிக்காததை அடுத்து சாடியுள்ளார், பிக்பாஸ் பிரபலம்.
தமிழில், திருமலை இயக்கத்தில் ஷாம் நடித்த அகம்புறம் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடி இருந்தவர் காஷ்மிரா ஷா.
பிக்பாஸ் நடிகையான இவர், இந்தியில், எஸ் பாஸ், பியார் து ஹோனா ஹி தா, சாஸிஸ், ஜங்கிள், சிட்டி ஆஃப் கோல்ட் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

கிளாமர் காட்சிகள்
சின்னத்திரை தொடர்கள் மற்றும் வெப்சீரிஸ்களில் நடித்து வரும் இவர், இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு மிகவும் பிரபலமானார். ஹாட் புகைப்படங்களாலும் கிளாமர் காட்சிகளாலும் ரசிகர்களால் அதிகம் கவனிக்கப்பட்டவர் இவர். இப்போது இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாகி விட்டாலும் கிளாமர் போட்டோக்களை பதிவிட்டு வருகிறார்.

சம்பவனா சேத்
இவர் தனது தோழியும் நடிகையுமான சம்பவனா சேத் பற்றி பரபரப்பு செய்தி ஒன்றை தெரிவித்துள்ளார். சம்பவனா சேத், இந்தியில் சில படங்களில் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்ட இவர், சீரியல்களில் நடித்து வருகிறார். இவரது கணவர் நடிகர் அவினாஷ் திவிவேதி.

மருத்துவமனை
கடந்த சில நாட்களுக்கு முன் உடல் நலமில்லாமல் மருத்துவமனைக்குச் சென்றார் சம்பவனா சேத். கடுமையான உடல் வலி காரணமாகச் சென்ற அவரை, சில மருத்துவமனைகள் அனுமதிக்கவில்லை. கொரோனா வைரஸ் தொற்றுப் பயம் காரணமாக, அவரை மருத்துவமனைகள் அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. பின்னர் வேறொரு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று இப்போது வீட்டுக்குத் திரும்பியுள்ளார்.

கடவுளுக்கு நன்றி
இதையடுத்து அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ள காஷ்மிரா, ‘எனது தோழி சம்பவனா சேத், உடல்நலம் தேறி வீட்டுக்கு வந்ததற்காக கடவுளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறையை சேர்ந்தவர்களை பாராட்டுகிறோம்.

புகழ்பெற்ற நடிகை
ஆனால், சம்பவனாவுக்கு நடந்த சம்பவத்தைக் கேட்டுத் திகைக்கிறேன். புகழ்பெற்ற சில மருத்துவமனைகள் அவரை அனுமதிக்க மறுத்துள்ளதை என்னால் நம்பமுடியவில்லை. (கொரோனா தவிர) வேறு நோயால் யாரும் பாதிக்கப்படமாட்டார்களா? புகழ்பெற்ற நடிகைக்கே இப்படி என்றால் ஏழை மக்களை எப்படி நடத்துவார்கள்? என்று கேட்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Click it and Unblock the Notifications











