'ஹமீத்' படத்திற்காக தனக்கு தேசிய விருது கிடைத்ததே தெரியாத காஷ்மீர் சிறுவன்

By Siva

மும்பை: தனக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது கிடைத்தது இன்னும் தெரியாமல் உள்ளார் காஷ்மீரை சேர்ந்த தல்ஹா அர்ஷத் ரேஷி.

66வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டபோது ஹமீத் என்கிற படத்திற்கு சிறந்த உருது படத்திற்கான விருது கிடைத்துள்ளது. அந்த படத்தில் ஹமீதாக நடித்த காஷ்மீரை சேர்ந்த சிறுவன் தல்ஹா அர்ஷத் ரேஷிக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Kashmiri boy is yet to know about his national award

ஹமீத் படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள் கிடைத்துள்ளது குறித்து அந்த படத்தின் இயக்குநர் ஐஜாஸ் கான் கூறியதாவது,

இந்த விருதுகளால் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த விருதுகளால் நான் எவ்வளவு மகிழ்ச்சி அடைந்துள்ளேன் என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. மொத்த படக்குழு, என் பெற்றோர் மற்றும் குடும்பத்தாருக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.

இந்த விருது எனக்கு இனிப்பு மற்றும் கசப்பான செய்தியாக உள்ளது. ஏனென்றால் எங்கள் படத்தின் ஹீரோ தல்ஹா அர்ஷத்தை தொடர்பு கொண்டு விபரத்தை தெரிவிக்க முடியவில்லை. காஷ்மீரில் தொலைத்தொடர்பு சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் தல்ஹாவை தொடர்பு கொள்ள முடியவில்லை. இந்த நல்ல செய்தியை உடனே அந்த சிறுவனிடம் கூற வேண்டும் போன்று உள்ளது. ஆனால் முடியவில்லை என்றார்.

ஹமீத் படம் முழுக்க முழுக்க காஷ்மீரில் படமாக்கப்பட்டது. மேலும் அந்த படத்தில் நடித்த 8 வயது சிறுவன் தல்ஹா காஷ்மீரை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதால் கலவரம் ஏற்படுவதை தடுக்கும் வகையில் தொலைத் தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X