பில்லி சூனிய கதையா கார்த்தி - நயனின் காஷ்மோரா?
கோடம்பாக்கத்தில் பேய் சீஸன் இன்னும் தொடர்ந்துக்கொண்டுதான் இருக்கிறது தமிழ் சினிமாவில்.
இப்போது தயாரிப்பில் இருக்கும் படங்களில் பாதி படங்கள் பேய் படங்கள்தான்.
அமானுஷ்யங்களின் மீது மக்களுக்கு இருக்கும் அடிமைத்தனம்தான் எல்லாவற்றுக்கும் காரணம். பெரிய ஹீரோ, ஹீரோயின்களே இதற்கு விதிவிலக்கல்ல.

பேயே துணை
சூர்யா மாசு என்று முழுப் பேய் படத்தில் நடித்தார். விஜய்யின் தெறியிலும் பேய் ஸீன் வைத்தார்கள். நயன்தாரா, த்ரிஷா என லீட் ரோலில் நடிக்கும் ஹீரோயின்களுக்கும் பேயே துணை. இந்த வரிசையில் கார்த்தியும் சேர்ந்துவிட்டார் போல...

காஷ்மோரா
கார்த்தி நயன் தாரா, ஸ்ரீதிவ்யா நடிப்பில் பிரம்மாண்டமாக வளர்ந்து வரும் படம் காஷ்மோரா. இந்த படத்தை 'இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா?' கோகுல் இயக்குகிறார். காஷ்மோரா படம் பில்லி சூனியம் பற்றிய கதை என பட யூனிட்டை சேர்ந்த ஒருவர் கிசுகிசுத்தார். ஒரு பக்கம் இன்றைய பில்லி சூனியமும், இன்னொரு பக்கம் அரச கால பில்லி சூனியமும் என ரசிகர்களை பயத்தின் உச்சிக்கே கொண்டு செல்லுமாம் காஷ்மோரா.

4 கெட்டப்புகள்
படத்தில் கார்த்திக்கு மட்டும் 4 கெட்டப்கள். இந்த 4 கெட்டப்களுமே வித்தியாசமானவையே... எனவே ஒவ்வொரு கெட்டப்புக்கும் மேக்கப் போடவே மூன்று மணி நேரம் ஆகுமாம்.

தீபாவளிக்கு
15க்கு மேற்பட்ட செட்களில் படமாகி இருக்கிறது காஷ்மோரா. சுமார் 45 கோடி பட்ஜெட்டில் உருவாகும் காஷ்மோராவின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. கிராபிக்ஸ் காட்சிகள் அதிகம் என்பதால் போஸ்ட் புரடக்ஷன் மட்டும் இரண்டு மாதங்கள் பிடிக்கும். தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்கள்.


Click it and Unblock the Notifications











