கஸ்தூரியின் அதிரடி நடவடிக்கை.... லதாவுடனான பிரச்சினை ஒருவழியாக முடிந்தது!
நடிகை கஸ்தூரி, நடிகை லதாவிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
Recommended Video

ஐபிஎல்-விளையாட்டையும், எம்ஜிஆர்-லதாவையும் ஒப்பிட்ட கஸ்தூரி- வீடியோ
சென்னை: நடிகை லதாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடிகை கஸ்தூரி மன்னிப்பு கேட்டார்.
இருதினங்களுக்கு முன்பு ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடர்பாக டிவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டார் நடிகை கஸ்தூரி. அதில், "என்னய்யா இது பல்லாண்டு வாழ்க படத்துல வாத்தியாரு லதாவை தடவினதைவிட அதிகமா தடவுறாங்க. சிஎஸ்கே 81-4 (14 ஓவர்கள்)", என கூறியிருந்தார்.

கஸ்தூரியின் இந்த பதிவிற்கு எம்.ஜி.ஆர். ரசிகர்கள் உள்பட ஏராளமானவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். நடிகை லதாவும் தனது கோபத்தை வெளிப்படுத்தி இருந்தார். ஆனால் தனது பதிவை நியாயப்படுத்தும் வகையில் மற்றொரு டிவீட்டை கஸ்தூரி வெளியிட்டார். அதற்கும் கடும் கண்டனங்கள் எழுந்தன.
இந்நிலையில், லதாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கஸ்தூரி மன்னிப்பு கேட்டுள்ளார். இதையடுத்து இந்த பிரச்சினைக்கு முற்றுபுள்ளி வைக்கப்பட்டுள்ளது.
Comments


Click it and Unblock the Notifications