சக்சஸ்.. ஒரு வழியாக பிக் பாஸ் அவமானத்தை மாற்றிய கஸ்தூரி.. தில்லு இருந்தா இப்ப கலாய்ங்க பார்க்கலாம்!

நடிகை கஸ்தூரி வெற்றிகரமாக சர்க்கரை பொங்கல் செய்ய கற்றுக்கொண்டுவிட்டார்.

Recommended Video

Bigg Boss 3 Tamil: Kasthuri oppose kamal comments

சென்னை: கூகுள் உதவியுடன் தான் சர்க்கரை பொங்கல் செய்ய கற்றுக்கொண்டுவிட்டதாக நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

டிவிட்டரில் சிங்கம் போல் கர்ஜித்துக்கொண்டிருந்த நடிகை கஸ்தூரியை பிக் பாஸ் வீடு எலியாக மாற்றியது. அதற்கு முக்கிய காரணம் அந்த வீட்டில் அவர் செய்த சர்க்கரை பொங்கல்.

பிக் பாஸ் வீட்டில் நுழையும் போது சும்மா கெத்தாக காலடி எடுத்து வைத்த கஸ்தூரி, அடுத்தடுத்து வாங்கியதெல்லாம் செம மொக்கைகள். கவின், சாண்டி உள்ளிட்டோர் கஸ்தூரியை செமையாக கலாய்த்தனர்.

பொங்கல் டாஸ்க்

பொங்கல் டாஸ்க்

ஒருமுறை ஹவுஸ்மேட்ஸ்க்கு சர்க்கரை பொங்கல் செய்யும் டாஸ்க் கொடுக்கப்பட்டது. அந்த சமயம் ஒயில்ட் கார்டு எண்ட்ரி மூலம் வீட்டிற்கு புதிதாக வந்த கஸ்தூரியை தான் ஹவுஸ்மேட்ஸ் மலைப் போல் நம்பினர்.

பயங்கரமான பொங்கல்

பயங்கரமான பொங்கல்

ஆனால் கஸ்தூரியோ சர்க்கரை பொங்கல் செய்கிறேன் என கூறி வேறு எதையோ செய்துவிட்டார். வாயில் வைத்து ருசி பார்க்கக்கூட யாரும் முன்வரவில்லை. அவர் செய்த சர்க்கரை பொங்கலை பார்ப்பதற்கு அத்தனை பயங்கரமாக இருந்தது.

வெப்பனாக மாறிய பொங்கல்

வெப்பனாக மாறிய பொங்கல்

இதையடுத்து சர்க்கரை பொங்கலை வைத்தே கஸ்தூரியை ஹவுஸ்மேட்ஸ் கலாய்க்க ஆரம்பித்தனர். எந்த சண்டை ஏற்பட்டாலும், கஸ்தூரியை கார்னர் செய்ய சர்க்கரை பொங்கலையே அவர்கள் வெப்பனாக பயன்படுத்தினர். ஒரு சர்க்கரை பொங்கலால் கஸ்தூரிக்கு தீராத அவப்பெயர் உண்டானது.

கஸ்தூரியின் சர்க்கரை பொங்கல்

கஸ்தூரியின் சர்க்கரை பொங்கல்

இந்நிலையில் கஸ்தூரி தனது டிவிட்டர் பக்கத்தில், ஒரு தொன்னையில் சர்க்கரை பொங்கல் வைத்து போட்டோ எடுத்து போட்டுள்ளார். மேலும் கூகுள் உதவியுடன் சர்க்கரை பொங்கல் செய்ய கற்றுக்கொண்டுவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

உண்மையான வெற்றி

விஜயதசமி பண்டிகையையொட்டி அவர் சர்க்கரை பொங்கல் செய்துள்ளார். மேலும் "நமக்கொண்ணு தெரியாதது தோல்வியில்லை...கற்றுக்கொள்ள மறுப்பதுதான் தோல்வி. தவறை திருத்திகொள்வதே உண்மையான வெற்றி", என கஸ்தூரி அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

பொங்கல் வெச்சது இல்லையா

"விஜயதசமிக்கு பொங்கல் செய்வது இருக்கட்டும், இதுவரை உங்க வீட்ல தைப் பொங்கல் அன்று பொங்கல் செய்தது இல்லையா" என ஒருவர் சந்தேகம் எழுப்பியுள்ளார். அதற்கு கஸ்தூரி, "முதலில் அம்மா உதவுவார்கள், இப்போது கூகுள் உதவியுடன் சர்க்கரை பொங்கல் செய்துள்ளேன்", என பதிலளித்துள்ளார்.

ரசிகர்கள் ஷாக்

கஸ்தூரியின் இந்த பதிவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள், " அவங்க கண்ணுல ஏதோ சாதித்த வெறி தெரியுது", என கமெண்ட் செய்து வருகின்றனர். ஆக சர்க்கரை பொங்கலால் பிக் பாஸ் வீட்டில் ஏற்பட்ட களங்கத்தை, தன்னுடைய வீட்டில் வைத்து உடைத்துள்ளார் கஸ்தூரி. இருந்தாலும் அந்த சர்க்கரை பொங்கலை ருசி பார்த்தவர்கள் யாராவது இருக்காங்களா என தேடிப்பார்ப்பது நல்லது.

More from Filmibeat

Read more about: kasthuri கஸ்தூரி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X