வீ ஆர் தி பாய்சு.. நான் ஆம்பள என்று தானே ஊளையிடுவதை இவ்வளவு தட்டிகுடுக்க வேண்டாமே? கடுப்பான கஸ்தூரி!

Recommended Video

Bigg Boss 3 Tamil : We Are The Boys U : மீண்டும் கலக்க வரும் பிக் பாஸ் பாய்ஸ் கியாங்

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் வீ ஆர் தி பாய்சு நிகழ்ச்சிக்கு நடிகை கஸ்தூரி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி அண்மையில் நிறைவடைந்தது. மொத்தம் 17 போட்டியாளர்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் முகென் டைட்டில் வின்னர் ஆனார்.

பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது சாண்டி, முகென், கவின், தர்ஷன், லாஸ்லியா ஆகியோர் வீ ஆர் த பாய்ஸ் ஊ ஊஊ என்ற டேக்லைனோடு இருந்துவந்தனர். அவர்கள் ஐந்து பேரும் ஒரே மாதிரியான டீ ஷர்ட்டை அணிந்திருந்ததோடு தங்களுக்கு என ஒரு பாடலையும் அமைத்துக்கொண்டனர்.

லாஸை தவிர

லாஸை தவிர

தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த நிலையில் வீ ஆர் தி பாய்சு ஊஊஊ என விஜய் டிவி ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது. நேற்று ஒளிபரப்பான இந்நிகழ்ச்சியில் லாஸ்லியாவை தவிர அந்த கேங்கை சேர்ந்த மற்றவர்கள் பங்கேற்றனர்.

கடுப்பான கஸ்தூரி

கடுப்பான கஸ்தூரி

அப்போது மற்ற போட்டியாளர்களின் முகம் பதியப்பட்ட டீ ஷர்ட்டை அணிந்தப்படி அவர்களை போல பேசிக்காண்பித்தனர். இதனை பார்த்த நடிகை கஸ்தூரி கடுப்பாகியுள்ளார்.

மோசமனா ரசனை

மோசமனா ரசனை

இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், மிக மிக மோசமான ரசனை. விஜய் டிவி தங்களுக்கு பிடித்தமானவர்களை புரமோட் செய்வதில் நச்சுத்தனமான போலி ஆண்மையை புரமோட் செய்திருக்கிறது.

தட்டிக்குடுக்க வேண்டாமே?

நான் ஆம்பள நான் ஆம்பள என்று தனக்குத்தானே ஊளையிடுவதை இவ்வளவு தட்டிகுடுக்க வேண்டாமே? சிறந்த தரங்களை அமைப்பதற்கு நம் இளைஞர்களுக்கு நீங்கள் கடமைப்பட்டிருக்கிறீர்கள். என்று கூறி சாடியிருக்கிறார் கஸ்தூரி.

எரிச்சலாகிவிட்டது

கஸ்தூரியின் இந்த டிவிட்டை பார்த்த ரசிகர்கள் 100 சதவீதம் ஒத்துக்கொள்கிறோம். நிஜமாகவே இந்த நிகழ்ச்சி எரிச்சலை ஏற்படுத்துகிறது. ஆனால் அதைப் பார்க்கலாமா வேண்டாமா என்பது நம் விருப்பம் என்பது மகிழ்ச்சிக்குரியது. இன்னும் 2 மணி நேரம் இந்த எரிச்சலைக் காட்டி விஜய் டிவி தரத்தை தாழ்த்தி கொள்கிறது என்று கூறியுள்ளனர்.

வெறுத்துவிட்டேன்

உண்மைதான்.. முதலில் அது கேட்க நன்றாக இருந்தது. தொடர்ந்து பாடிக்கொண்டே இருந்தது எரிச்சலாய் இருந்தது, குறிப்பாக பெண்களுக்கு.. இப்போது அந்த பாட்டை நான் முற்றிலும் வெறுத்துவிட்டேன் என்கிறார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X