»   »  'ராஜா'வை அவமதித்த நாளிதழ்.. காரித் துப்பி கிழித்தெறிந்த கஸ்தூரி.. வைரல் வீடியோ #Ilaiyaraja

'ராஜா'வை அவமதித்த நாளிதழ்.. காரித் துப்பி கிழித்தெறிந்த கஸ்தூரி.. வைரல் வீடியோ #Ilaiyaraja

Posted By:
Subscribe to Oneindia Tamil
காரித் துப்பி கிழித்தெறிந்த கஸ்தூரி

சென்னை: இளையராஜாவின் சாதியை தலைப்பில் போட்ட பிரபல ஆங்கில நாளிதழை காரித் துப்பி கிழித்தெறிந்துள்ளார் நடிகை கஸ்தூரி.

இசைஞானி இளையராஜாவுக்கு பத்மவிபூஷன் விருது வழங்கப்பட உள்ள செய்தியை வெளியிட்ட பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று தலைப்பில் அவரின் சாதியை குறிப்பிட்டுள்ளது.

இதை பார்த்து இசைஞானியின் ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.

இளையராஜா

இளையராஜா தேசிய பொக்கிஷம். கடவுளுக்கு சாதி கிடையாது. இசைக்கு எல்லை இல்லை என்று கூறி இளையராஜாவின் சாதியை குறிப்பிட்டிருந்த பிரபல நாளிதழை காரித் துப்பி கிழித்துப் போட்ட வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் நடிகை கஸ்தூரி.

சாதி

இசைஞானியை சாதியின் பெயரை சொல்லி ஒரு வரையறைக்குள் அவரை கொண்டு வந்துள்ளதை பார்த்து ஒருவர் தனது ஆதங்கத்தை ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

பாராட்டு

இளையாராஜாவை பற்றி அவரது சாதியின் பெயரோடு செய்தி வெளியிட்டதை பார்த்து கஸ்தூரி கொந்தளித்ததற்கு ரசிகர்கள் அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

கோபம்

இளையராஜாவுக்கு பத்மவிபூஷன் கிடைத்துள்ளதை பற்றி மட்டும் எழுதாமல் சாதியை இழுத்த நாளிதழை ரசிகர்கள் திட்டித் தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

வெட்கம்

இளையராஜாவின் திறமையை பற்றி பேசாமல் தலைப்பில் சாதியை போட்ட நாளிதழை ரசிகர்கள் வன்மையாக கண்டித்துள்ளனர். கடையை சாத்திவிட்டு வீட்டிற்கு செல்லுமாறும் கூறியுள்ளனர்.

English summary
Actress Kasthuri has posted a video on twitter in which she is seen spitting on a leading English daily and tearing it into pieces. She tweeted that, '#Ilaiyaraja is a national treasure. God's have no caste. Music knows no walls.'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil