திருப்பதி லட்டு..கார்த்தியின் மன்னிப்பு.. அவர் குடும்பத்துக்கு இது புதுசு இல்லை.. நடிகை ஓபன் டாக்

சென்னை: இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாகவே திருப்பதி லட்டு விவகாரம்தான் தலைப்பு செய்தியாக இருந்தது. சூழல் இப்படி இருக்க மெய்யழகன் படத்தின் ப்ரோமோஷனுக்கு ஆந்திராவில் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கார்த்தி சிரித்துக்கொண்டே இந்த விஷயம் குறித்து பேசுகையில் சிரித்த்க்கொண்டே பேசினார். இதனை பவன் கல்யாண் சர்ச்சையாக்கினார். இதனையடுத்து கார்த்தி மன்னிப்பு கேட்டார். ஆனால் அவர் மன்னிப்பு கேட்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று குரல்கள் எழுந்தன. சூழல் இப்படி இருக்க கஸ்தூரி காட்டமாக பேசியிருக்கிறார்.

கோலிவுட்டின் ஃபேமஸ் நடிகர்களில் ஒருவரான கார்த்தி இப்போது மெய்யழகன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். படமானது நாளை ரிலீஸாகவிருக்கிறது. சென்னையில் நேற்று திரையிடப்பட்ட ஸ்பெஷல் ஷோவை பார்த்த ரசிகர்கள் படத்துக்கு தங்களது நல்ல வரவேற்பை கொடுத்திருக்கிறார்கள். இதற்கிடையே மெய்யழகன் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஆந்திராவில் சில நாட்களுக்கு முன்பு. அதில் கலந்துகொண்டதிலிருந்து கார்த்தியை சுற்றி சர்ச்சை எழுந்துவிட்டது.

karthi tirupati laddu meiyazhagan

என்ன சர்ச்சை: அதாவது திருப்பதி லட்டு விவகாரம் பரபரப்பாக நாடு முழுவதும் போய்க்கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் அந்த ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் லட்டு குறித்து பேச வேண்டாம் என்று சிரித்துக்கொண்டே கார்த்தி கூறினார். அதற்கு பவன் கல்யாண் எதிர்வினையாற்றினார். இது என்ன வம்பா போச்சு என்கிற தொனியில் கார்த்தியும் பவனிடம் மன்னிப்பு கேட்டார். ஆனால் அவர் மீது என்ன தவறு இருக்கிறது; எதற்காக அவர் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று தமிழ்நாட்டு ரசிகர்கள்கொந்தளிக்க ஆரம்பித்துவிட்டனர்.

கஸ்தூரி கருத்து: இந்நிலையில் நடிகை கஸ்தூரி இந்தச் சம்பவம் குறித்து பேசுகையில், "ஆந்திர மாநிலத்தின் துணை முதலமைச்சர் பவன் கல்யாணின் கடுமையான எச்சரிக்கைக்கு பிறகு கார்த்தி மன்னிப்பை கேட்டிருக்கிறார். அதுமட்டுமின்றி, தான் ஒரு வெங்கடஜலாபதியின் பக்தர் என்றும் அவர் சொல்லியிருக்கிறார்.கார்த்திக்கென்று தெலுங்கில் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. விரைவில் அவருடைய படம் அங்கு ரிலீஸாகவிருப்பதையும் நாம் பார்க்க வேண்டும்.

இது ஒன்றும் புதிது இல்லை: நகைச்சுவை என்கிற பெயரில் வந்த பிரச்னையை தவிர்ப்பதற்கு கார்த்தி முயற்சி செய்தார். ஆனால் அது முடியாமல் தோல்வியடைந்தார். அந்தக் கேள்விக்கு கார்த்தி தீவிரமாக ரியாக்ட் செய்திருந்தாலோ அல்லது அந்தத் தொகுப்பாளினியை எச்சரித்திருந்தாலோ எந்தப் பிரச்னையும் வந்திருக்காது என்று கருதுகிறேன். ஆனால் அந்தக் கேள்விக்கு கருத்து சொல்லி சர்ச்சையாக்கக்கூடாது என்று நினைத்து பலரை காயப்படுத்தியிருக்கிறார்.

சனாதன தர்மம் குறித்து கார்த்தியின் குடும்பம் சர்ச்சையில் சிக்குவது இது ஒன்றும் புதிது இல்லை. சபரிமலை குறித்து அவரது அப்பா சிவக்குமார் கருத்தும், கோயில்கள் குறித்து கார்த்தியின் அண்ணி ஜோதிகாவின் எதிர்ப்பு கருத்தும் முக்கியமானது" என்றார். . முன்னதாக ஒரு விழாவில் சிவக்குமார் குறித்து கிண்டலாக பேசிய கஸ்தூரிக்கு அந்த இடத்திலேயே கார்த்தி காட்டமான பதிலடி கொடுத்ததும்; உடன்பிறப்பே பட விழாவில் கோயிலையும், பள்ளிக்கூடத்தையும் கம்ப்பேர் செய்து பேசி ஜோதிகா சர்ச்சையில் சிக்கியதும் நினைவுகூரத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X