'உன்னுடல் அழகாக இருக்கிறது..லவ் யூ ஆல்வேஸ், பேபி..' பிக்பாஸ் பிரபலத்தைப் பாராட்டும் நடிகை கஸ்தூரி!

By

சென்னை: பிரபல பிக்பாஸ் பிரபலத்தை நடிகை கஸ்தூரி பாராட்டியுள்ளார்.

Recommended Video

Kasthuri praises biggboss Sakshi Agarwal

நடிகை சாக்‌ஷி அகர்வால், இன்ஸ்டாகிராமில் அடிக்கடி போட்டோக்களை பதிவிடுவது வழக்கம்.

பிக்பாஸ் பிரபலமான இவர், கொரோனா பீதி காரணமாக வீட்டில் இருப்பதால், தினமும் புதிய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

கவர்ச்சி ஆடை

இப்போது வெளியிட்டுள்ள புதிய புகைப்படத்தில், ஒர்க் அவுட்டுக்கு ரெடியாவது போல இருக்கிறார். இந்த போட்டோவுக்கு, உங்கள் உடலே, உங்களுக்கு சொந்தமான கவர்ச்சி ஆடையாக இருக்கட்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு ஏராளமான ரசிகர்கள், ஜாலியான கமென்ட் அடித்துள்ளனர். சிலர் அவரை அழகாக வர்ணித்துள்ளனர்.

அழகாக இருக்கிறது

அழகாக இருக்கிறது

சிலர், 'தினமும் ஒரு போட்டோவா? உங்களுக்கு இதே வேலையா போச்சு' என்று கலாய்த்துள்ளனர். இந்தப் போட்டோவுக்கு நடிகை கஸ்தூரி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் பதிவு செய்துள்ள கமென்ட்டில், 'பேபி, உன் உடல் அழகாக இருக்கிறது, உன் மனதும் கூட அழகானதுதான். லவ் யூ ஆல்வேஸ் என்று கூறியிருக்கிறார், நடிகை கஸ்தூரி.

லைவ் ஒர்க் அவுட்

லைவ் ஒர்க் அவுட்

இதற்கு, லவ் யூ ஸ்வீட் ஹார்ட் என்று பதிலளித்துள்ளார், சாக்‌ஷி அகர்வால். இவர்கள் இருவரும் பிக்பாஸ் தோழிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து ரசிகர் ஒருவர், இந்த கொரோனா வைரஸ் காலத்துலயும் எக்சர்சைஸ் பண்றதை விடாம இருக்கீங்களே... சூப்பர்ங்க' என்று தெரிவித்துள்ளார். இன்னொருவர், 'நீங்க ஒரு லேடி புரூஸ்லீ' என்று குறிப்பிட்டுள்ளார்.

தேவதை

தேவதை

அப்படியே ஒர்க் அவுட்-டை லைவ் பண்ணுங்களேன் என்று சிலர் கோரிக்கை வைத்துள்ளனர். உங்களை பார்த்து நானும் ஒர்க் அவுட் பண்றேன் என்று ஒரு நெட்டிசன் தெரிவித்துள்ளார். எந்த முகத்திற்கும் சிறந்த அலங்காரமாக புன்னகையே இருக்கிறது என்று ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த தனிமைப்படுத்துதல் காலத்தில் எக்சர்சைஸ் மட்டும்தான் சரியான வழி என்று சிலர் தெரிவித்துள்ளனர்.

பிக்பாஸ் சீசன் 3

பிக்பாஸ் சீசன் 3

இன்னும் சிலர், நீங்கள் தேவதை மாதிரி இருக்கீங்க, அழகோ, அழகு என வழக்கம் போல வர்ணித்துள்ளனர். உங்களுக்கு இனிமையான கண்கள் என்று சிலரும் எங்க தலைவி அழகோ அழகு என்றும் சிலர் வர்ணித்துள்ளனர். இதையடுத்து இந்த போட்டோ, சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

ஆர்யாவின் டெடி

ஆர்யாவின் டெடி

நடிகை சாக்‌ஷி, தமிழில், ராஜா ராணி, ரஜினியின் காலா, அஜித்தின் விஸ்வாசம் உட்பட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தவர் சாக்‌ஷி அகர்வால். ராய் லட்சுமியுடன் சின்ட்ரெல்லா, சக்தி சவுந்தரராஜன் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள டெடி, சுந்தர் சியின் அரண்மனை 3 படங்களில் நடித்து வருகிறார். பிக்பாஸ் சீசன் 3 மூலம் புகழ் பெற்ற அவருக்கு, அதிக வாய்ப்புகள் வந்தன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X