தனுஷின் விவாகரத்து.. செம கடுப்பான கஸ்தூரி ராஜா.. ரொம்ப கவலையில் இருக்கார் போல
சென்னை: தனுஷும், ஐஸ்வர்யாவும் விவாகரத்து பெற்று பிரியவிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு இரண்டு பேருமே விவாகரத்து வழக்கில் நேரில் ஆஜரானார்கள். அப்போது தங்களுக்கு விவாகரத்தில் முழு சம்மதம் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மீண்டும் சேர்வார்கள் என்று எதிர்பார்த்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்திருக்கின்றனர். இந்தச் சூழலில் இவ்விவகாரம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா கோபமடைந்திருக்கிறார்.
இந்திய அளவில் சிறந்த நடிகர் என்ற பெயரை பெற்றிருக்கிறார் தனுஷ். அவர் ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். சூழல் இப்படி இருக்க சில வருடங்களுக்கு முன்பு தனுஷும் ஐஸ்வர்யாவும் பிரிவதாக அறிவித்தார்கள். மகன்கள் நன்றாக வளர்ந்த பிறகு எதற்காக அவர்கள் இந்த முடிவை எடுக்க வேண்டும் என்று பலரும் கேள்வி எழுப்பினார்கள்.

யார் காரணம்?: இவர்களது விவாகரத்துக்கு யூகங்களாக பல காரணங்கள் சொல்லப்பட்டன. அதிலும் தனுஷின் செயல்பாடுகள்தான் இந்த விவாகரத்துக்கு காரணம் என்று ஒருதரப்பினரும்; அதெல்லாம் இல்லை தனுஷின் குடும்பத்தை ரஜினியின் குடும்பத்தினர் சுத்தமாக மதிப்பதே இல்லை. இத்தனை வருடங்கள் பொறுத்து பொறுத்து பார்த்த தனுஷ் அதன் காரணமாகத்தான் விவாகரத்தை நோக்கி நகர்ந்துவிட்டார் என்று மறுதரப்பினரும் தொடர்ந்து கூற ஆரம்பித்தார்கள்.
போய்ஸில் வீடு: அதுமட்டுமின்றி தனது குடும்பத்தை மதிக்காத ரஜினியின் குடும்பத்தை பழிவாங்குவதற்காகவும்; தான் ஒன்றும் சளைத்தவன் இல்லை என்பதை அவர்களுக்கு நிரூபிப்பதற்காக மட்டுமே போய்ஸ் கார்டனில் சகல வசதிகளுடன் கூடிய பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள பங்களாவை போயஸ் கார்டனில் தனுஷ் வீம்புக்கு கட்டியதாகவும் ஒரு தகவல் ஓடிக்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே அவர்கள் இருவரையும் இணைத்து வைக்க ரஜினிகாந்த் ரொம்பவே விருப்பப்படுகிறார் என்றும்; அவருக்காக மீண்டும் இரண்டு பேரும் இணைவார்கள் என்றும் சொல்லப்பட்டது.
நேரில் ஆஜர்: இதனால் அவர்கள் கண்டிப்பாக இணைவது உறுதி என்று ரசிகர்கள் நம்பினார்கள். அதற்கேற்றபடிதான் தங்களது விவாகரத்து வழக்கு விசாரணையின் முதல் இரண்டு ஹியரிங்கில் தனுஷும், ஐஸ்வர்யாவும் ஆஜராகவில்லை. ஆனால் யாரும் எதிர்பார்க்காத விதமாக சில நாட்களுக்கு முன்பு நடந்த வழக்கு விசாரணையில் இரண்டு பேருமே ஆஜராகி அதிர்ச்சியளித்தார்கள். அதுமட்டுமின்றி அந்த விசாரணையில் தங்களுக்கு விவாகரத்தில் பரிபூரண சம்மதம் என்று இருவருமே கூறியதாக சொல்லப்படுகிறது.
கடுப்பான கஸ்தூரி ராஜா: சூழல் இப்படி இருக்க இந்த வழக்கு விசாரணையில் வரும் 27ஆம் தேதி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவிருக்கிறது. எந்த மாதிரியான தீர்ப்பு வழங்கும் என்ற ஆவல் இப்போதே ரசிகர்களிடமும், திரைத்துறையினரிடமும் ஆவல் அதிகரித்திருக்கிறது. இந்நிலையில் தனுஷின் தந்தையும், இயக்குநருமான கஸ்தூரி ராஜா சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு கஸ்தூரி ராஜா, "இது நமக்கு சம்பந்தம் இல்லாத கேள்வி. நீங்கள் கேட்கக்கூடாது. நான் இதனால்தான் பத்திரிகையாளர்களை சந்திப்பதே இல்லை. இது ஒரு அத்துமீறிய கேள்வி. சாரி" என்றார் கடுப்பாக. இதனை பார்த்த நெட்டிசன்கள் மகன் விவாகரத்து விஷயத்தில் கஸ்தூரி ராஜா ரொம்பவே கவலையா இருக்கார் போல. அதனால்தான் இப்படி ஒரு பதிலை சொல்லியிருக்கிறார் என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











