தனுஷுக்கு சினிமாவே பிடிக்காது.. அழுதுகிட்டே நடிப்பான்.. அப்பா கஸ்தூரி ராஜா இப்படி சொல்லிட்டாரே!

சென்னை: பவிஷ் நடித்துள்ள லவ்வோ லவ் திரைப்படம் வரும் ஜூலை 10ம் தேதி திரைக்கு வருகிறது. அதர்வா நடிப்பில் உருவாகி உள்ள இதயம் முரளி படத்துடன் பவிஷ் படம் மோதுகிறது. மேலும், இந்த வாரம் லக்‌ஷ்மிகாந்தன் கொலை வழக்கு உள்ளிட்ட படங்களும் வெளியாக காத்திருக்கின்றன.

இந்நிலையில், இன்று நடைபெற்ற ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் தனுஷின் அப்பாவும் பவிஷின் தாத்தாவுமான கஸ்தூரி ராஜா கலந்துக் கொண்டார். அவர் பேசும் போது ஒரே மேடையில் அப்பா, மகன், பேரன் என 3 பேரும் இருப்பது ரொம்பவே பெருமையாக உள்ளது.

Kasthuri Raja frankly says Dhanush not like Cinema and he is crying for come to shoot

இந்த இடத்துக்கு வர ரொம்பவே போராட்டங்களை சந்தித்துள்ளேன். ஆரம்பத்தில் தனுஷ் எல்லாம் சினிமாவே பிடிக்காது என்றும் ஷூட்டிங் வரவே அழுவார் என்றும் கஸ்தூரி ராஜா வெளிப்படையாக பேசியது வைரலாகி வருகிறது.

பவிஷின் 2வது படம்: மாமா தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றி வந்த பவிஷ் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தனுஷ் போலவே இருக்கிறார், தனுஷ் போலவே பேசுகிறார், தனுஷ் போலவே நடக்கிறார் என பவிஷை பலரும் விமர்சித்தனர். ஆனால், சிறந்த நடிகர் தனுஷ் போலவே இருக்கிறேன் எனக் கூறுவது எனக்கு கிடைத்த காம்ப்ளிமெண்ட்ஸ் தான் என பவிஷ் கூறினார். நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தைத் தொடர்ந்து தற்போது லவ்வோ லவ் படம் இந்த வாரம் ரிலீஸாக காத்திருக்கிறது.

செல்வராகவன் நல்ல மாணவன்: என்னோட குழந்தைகள் சினிமாவுக்கு வரக்கூடாது என ரொம்பவே நினைத்தேன். ப்ரிவ்யூ ஷோக்களுக்கு கூட பசங்கள கூட்டிட்டுப் போக மாட்டேன். செல்வராகவன் ரொம்ப நல்லா மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிச்சிட்டு இருந்தார். ஆனால், 2வது ஆண்டில் திடீரென ஒருநாளில் வந்து இதற்கு மேல் சினிமா தான் என்றார். எனக்கு எளிதில் கோபம் வந்துவிடும். ஆனால், அன்று அவரை திட்டவில்லை. பட்டம் வாங்கிட்டு வாப்பா சினிமாவில் சேர்த்து விடுகிறேன் என்றேன். அவரும் பட்டம் வாங்கிட்டு வந்து சினிமா என்றார். அப்போதும் அவரை அமெரிக்காவுக்கு அனுப்ப நினைத்தேன். ஆனால், காதல் கொண்டேன் படத்தை இயக்கி இன்று இவ்வளவு பெரிய இயக்குநராக மாறுவார் என அப்போது நான் நினைக்கவே இல்லை என்றார்.

அழுதுகிட்டே நடிப்பான்: இளைய மகன் தனுஷுக்கு சினிமாவே பிடிக்காது. ஆரம்பத்தில் ஒரு 5 படங்கள் வரை அழுதுகிட்டே தான் நடிப்பான். ஷூட்டிங் போகவே பிடிக்காது. அதன் பின்னர் தான் சினிமாவை புரிந்துக் கொண்டு இன்று நடிகராகவும் இயக்குநராகவும் கலக்கி வருகிறார் என கஸ்தூரி ராஜா செம ஓபனாக பேசியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X