மறுபடியும் கஸ்தூரி ராஜா... முற்றிலும் புதுமுகங்களுடன்.. கூடவே பிரபு, ராதிகாவும்!
சென்னை: இயக்குநர் கஸ்தூரி ராஜா பெரும் இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் இயக்கத்திற்குத் திரும்பியுள்ளார்.
காசு, பணம் துட்டு என்ற பெயரிலான புதிய படத்தை இயக்கியுள்ளார் அவர். இதில் முற்றிலும் புதுமுகங்களே நடித்துள்ளனர்.
முக்கிய வேடத்தில் பிரபு, ராதிகாவும் படத்தில் உள்ளனர்.

துள்ளுவதோ இளமை....
துள்ளுவதோ இளமை, காதல்கொண்டேன், திருவிளையாடல் ஆரம்பம், யாரடி நீ மோகினி உட்பட பல வெற்றிப்படங்களைத் தயாரித்த விமலகீதாவின் ஆர்.கே. புரொடக்ஷன்ஸ் (பி) லிட் பட நிறுவனம் தயாரிக்கும் படம்தான் காசு பணம் துட்டு.

புது நாயகி ஸ்ருதி பட்டேல்...
இந்த படத்தில் மித்ரன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அதேபோல நாயகியாக ஸ்ருதி பட்டேல் நடித்துள்ளார். இருவருமே புதுமுகங்கள்தான்.

கதை, திரைக்கதை, வசனம்,பாடல்கள்
இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம், பாடல்களை எழுதி இயக்குகிறார் கஸ்தூரிராஜா. மகள் டாக்டர் விமலகீதா தயாரிக்கிறார்.

23வது படம்
படம் பற்றி இயக்குனர் கஸ்தூரி ராஜாவிடம் கேட்ட போது..... காசு பணம் துட்டு நான் இயக்கும் 23 வது படம் இது. படத்தின் பெரும்பகுதி படப் பிடிப்பு முடிவடைந்தது விட்டது.

பாசம், அன்பை மீறிய பணம்
படத்தின் கதையோட்டத்துக்கு மிக முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்க பிரபு, ராதிகா இருவரிடமும் கேட்டேன் உடனே நடிக்க ஒத்து கொண்டார்கள். இருவரின் கதாபாத்திரமும் வலிமையானது. இன்று உறவுகள், பாசம்,அன்பு இதையெல்லாம் மீறிய விஷயமாக பணம் மாறி விட்டது.

சமுதாயம்தான் காரணம்
பிறகும் போதே யாரும் திருடனாக பிறப்பதில்லை. திருடன், பிக்பாக்கெட், ரவுடி, கொலைகாரன்,கொள்ளைக்காரன் என அவர்களை மாற்றியது யார்... இந்த சமுதாயம் தான்.

காசு, போதை, மிருக குணம்
காசும், போதை பழக்கமும் தான் மனித குணத்தை மிருக குணமாக மாற்றி விடுகிறது என்கிற ஒரு வரி கதையை இரண்டு மணி நேர திரைக்கதையாக்கி இருக்கிறோம். படப்பிடிப்பு சென்னை, கேரளா, பாண்டிச்சேரி பகுதிகளில் நடை பெற்றிருக்கிறது என்றார்.


Click it and Unblock the Notifications











